support@techeditz2utnpsc.com | 8300-921-521
விஜயநகர், பாமினி அரசுகள்
Samacheer Book Back Questions And Answers For வரலாறு Standard 7 Term 2 “விஜயநகர், பாமினி அரசுகள்”
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. சங்கம வம்சத்தின் மிக சிறந்த ஆட்சியாளர் யார்?
அ) புக்கர்
ஆ) தேவராயா – II
இ) ஹரிஹரர் – II
ஈ) கிருஷ்ண தேவராயர்
2. விஜயநகர கட்டட தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது?
அ) யானை
ஆ) குதிரை
இ) பசு
ஈ) மான்
3. சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்?
அ) ராமராயர்
ஆ) திருமலதேவராயா
இ) இரண்யம் தேவராயர்
ஈ) இரண்டாம் விருபாக்சராயர்
4. மதுரை சுல்தானிய அரசை முடிவுக்குக் கொண்டு வந்தவர்
அ) சாளுவ நரசிம்மர்
ஆ) இரண்டாம் தேவராயர்
இ) குமார கம்பண்ணா
ஈ) திருமலை தேவராயர்
5. பாமினி அரசில் சிறந்த மொழியறிஞராகவும், கவிஞராகவும் விளங்கியவர்
அ) அலாவுதீன் ஹசன்விரா
ஆ) முகம்மது – 1
இ) சுல்தான் பெரோஸ்
ஈ) முஜாஹித்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. ஆரவீடு வம்சத்தின் தலைநகரம் _____.
2. விஜயநகரப் பேரரசர்களால் வெளியிடப்பட்ட நாணயங்களுக்கு _____ என்று பெயர்
3. மகமது கவான் வெடிமருந்து தயாரிக்கவும் அதனைப் பயன்படுத்துவது பற்றி விளக்குவதற்காகவும் _____ வேதியியல் அறிஞர்களை வரச் செய்தார்.
4. விஜயநகர் நிர்வாகத்தில் கிராம விவகாரங்களை _____ கவனித்தார்.
விடைகள்:
1. பெனுகொண்டா
2. வராகன்
3. பாரசீக
4. கௌடா என்ற கிராமத்தலைவர்
III. பொருத்துக:
1. விஜயநகரா அ. ஒடிசாவின் ஆட்சியாளர்
2. பிரதாபருத்ரா ஆ. அஷ்டதிக்கஜம்
3. கிருஷ்ண தேவராயா இ. பாண்டுரங்க மகாமத்தியம்
4. அப்துர் ரசாக் ஈ. வெற்றியின் நகரம்
5. தெனாலிராமகிருஷ்ணா உ. பாரசீக சிற்ப கலைஞர்
விடைகள்:
1. ஈ
2. அ
3. ஆ
4. உ
5. இ
IV. கூற்றைக் காரணத்தோடு பொருத்துக: பொருத்தமான விடையை (✓) டிக் இட்டுக் காட்டவும்:
1. கூற்று: இந்தியாவில் விஜயநகர அரசின் இராணுவம் அச்சுறுத்தக் கூடியதாக இருந்தது.
காரணம்: விஜயநகர இராணுவம் பீரங்கிப்படை மற்றும் குதிரைப்படையை கொண்டிருந்தது.
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
இ) காரணம் மற்றும் கூற்று தவறு
ஈ) காரணம் மற்றும் கூற்று சரி
2. தவறான இணையைக் கண்டறியவும்
அ) பட்டு – சீனா
ஆ) வாசனைப் பொருட்கள் – அரேபியா
இ) விலைமதிப்பற்ற கற்கள் – பர்மா
ஈ) மதுரா விஜயம் – கங்கா தேவி
3. பொருந்தாததைக் கண்டுபிடி:
அ) ஹரிஹரா – II
ஆ) மகமுது – 1
இ) கிருஷ்ண தேவராயர்
ஈ) தேவராயா – 1
4. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. பொருத்தமான விடையை (✓) டிக் இட்டு காட்டவும்:
I. பச்சைக்கலந்த நீலவண்ணத்தைக் கொண்ட விலையுயர்ந்த கற்களால் ஆன அரியணை பாரசீக அரசர்களின் அரசவையை அலங்கரித்தன என பிர்தௌசி தன்னுடைய ஷா நாமா எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
II. விஜயநகர, பாமினி அரசர்களுக்கிடையே மோதல்கள் ஏற்படுவதற்குக் கிருஷ்ணாதுங்கபத்ரா நதிகளுக்கு இடைப்பட்ட செழிப்பான பகுதி மற்றும் கிருஷ்ணாகோதாவரி நதிகளுக்கு இடைப்பட்ட கழிமுகப் பகுதியே காரணமாக அமைந்தன.
III. முதலாம் முகமது முல்தானில் கல்வி பயின்றார்.
IV. முகமது கவான் மூன்றாம் முகமதுவின் கீழ் தனித்தன்மை மிக்க பிரதம அமைச்சராக பணியாற்றினார்.
அ) I, II மற்றும் IV சரி
ஆ) I, II மற்றும் III சரி
இ) II, III மற்றும் IV சரி
ஈ) III மற்றும் IV சரி
V. சரியா? தவறா?
1. பாமினி அரசைத் தோற்றுவித்தவர்கள் ஹரிஹரா மற்றும் புக்கர் ஆவார்கள்
2. இருபது ஆண்டுகள் ஆட்சி செய்த கிருஷ்ணதேவராயர் சங்கம வம்சத்தின் மிகச்சிறந்த அரசராவார்
3. அஸ்டதிக்கஜத்தில் அல்லசானி பெத்தண்ணா குறிப்பிட தகுந்தவராவார்
4. விஜயநகரப் பேரரசில் அரசுரிமை என்பது பரம்பரையாகவும், பிறப்புரிமையின் அடிப்படையிலும் வழங்கப்பட்டது.
5. பாமினி அரசில் 18 முடியரசுகள் இருந்தன
விடைகள்:
1. தவறு
2. தவறு
3. சரி
4. சரி
5. சரி
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here
It was very useful. Thank you so much for the clear explanations and the QA session. The website was very handy and easy to use. It ‘ll be useful for lots of students. Thank you Rajesh Sir.