support@techeditz2utnpsc.com | 8300-921-521
பெயர்ச்சொல்
Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 3 அறம், தத்துவம்,சிந்தனை – எல்லாரும் இன்புற “பெயர்ச்சொல்”
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. இடுகுறிப்பெயரை வட்டமிடுக
அ) பறவை
ஆ) மண்
இ) முக்காலி
ஈ) மரங்கொத்தி
2. காரணப்பெயரை வட்டமிடுக
அ) மரம்
ஆ) வளையல்
இ) சுவர்
ஈ) யானை
3. இடுகுறிசிறப்புப்பெயரை வட்டமிடுக
அ) வயல்
ஆ) வாழை
இ) மீன்கொத்தி
ஈ) பறவை
II. பெயர்ச்சாெற்களை அகரவரிசையில் எழுதுக:
பூனை, தையல், தேனி, ஓணான், மான், வௌவால், கிளி, மாணவன், மனிதன், ஆசிரியர், பழம்
விடைகள்:
ஆசிரியர், ஓணான், கிளி, தேனி, தையல், பழம், பூனை, மனிதன், மாணவன், மான், வெளவால்
III. பின்வரும் வாக்கியங்களில் உள்ள அறுவகைப் பெயர்களை எடுத்து எழுதுக:
1. கைகள் இரண்டும் பிறர்க்கு உதவுவதே எனச் சான்றோர்கள் கருதினர்
2. அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூலின் பயனாகும்
3. அறிஞர்களுக்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்
4. நீதிநூல் பயில் என்கிறார் பாரதியார்
5. மாலை முழுவதும் விளையாட்டு
6. அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்
விடைகள்:
1. கைகள் இரண்டும் பிறர்க்கு உதவுவதே எனச் சான்றோர்கள் கருதினர்
சினைப்பெயர் – கைகள்
பண்புப்பெயர் – இரண்டும், சான்றோர்கள்
தொழிற்பெயர் – உதவுவதே, கருதினர்
2. அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூலின் பயனாகும்
தொழிற்பெயர் – அடைதல்
பொருட்பெயர் – அறம், பொருள், இன்பம், வீடு, நூல், நூலின்
3. அறிஞர்களுக்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்
பண்புப்பெயர் – அழகு
தொழிற்பெயர் – கற்றுணர்ந்து, அடங்கல்
பொருட்பெயர் – அறிஞர்களுக்கு
4. நீதிநூல் பயில் என்கிறார் பாரதியார்
தொழிற்பெயர் – பயில்
பொருட்பெயர் – நீதிநூல், பாரதியார்
5. மாலை முழுவதும் விளையாட்டு
தொழிற்பெயர் – விளையாட்டு
காலப்பெயர் – மாலை
6. அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்
பண்புப்பெயர் – அன்பு, மேலோர்
பொருட்பெயர் – உடையவர்கள்
IV. அடிக்கோடிட்ட சொல் எவ்வகைப் பெயர்ச்சொல் என்பதை எழுதுக:
1. விடியலில் துயில் எழுந்தவன்.
2. இறைவனைக் கை தொழுதேன்.
3. புகழ்பூத்த மதுரைக்குச் சென்றேன்
4. புத்தகம் வாங்கி வந்தேன்
5. கற்றலைத் தொடர்வோம் இனி
6. நன்மைகள் பெருகும் நனி
விடைகள்:
1. துயில் – காலப்பெயர்
2. கை – சினைப்பெயர்
3. மதுரைக்குச் – இடப்பெயர்
4. புத்தகம் – பொருட்பெயர்
5. கற்றலைத் – தொழிற்பெயர்
6. நன்மைகள் – பண்புப்பெயர்
V. கட்டங்களில் உள்ள வார்த்தைகளைக் கொண்டு தொடர்களை அமைக்க:
விடைகள்:
1. வாய்மையே வெல்லும்
2. யாதும் ஊரே யாவரும் கேளிர்
3. தீதும் நன்றும் பிறர்தர வாரா
VI. சொற்றொடரை முறையாக வரிசைப்படுத்துங்கள்:
1. சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்
2. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்
3. சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்
4. அமுதசுரபியைப் பெற்றாள்
5. ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்
விடைகள்:
1. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்
2. அமுதசுரபியைப் பெற்றாள்
3. ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்
4. சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்
5. சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்
VII. ஒலி வேறுபாடறிந்து வாக்கியத்தில் அமை:
அரம் – அறம்
மனம் – மணம்
விடைகள்:
1. இரும்பைத் தேய்த்துக் கூர்மையாக்குவதற்கு அரம் பயன்படும்
2. இனிமையாய்ப் பேசுவது அறம்
3. பிறருக்கு உதவி செய்வதற்கு மனம் வேண்டும்.
4. மல்லிகை மணம் மிக்க மலர்.
VIII. இருபொருள் தருக:
1. ஆறு – _____
ஆறு – _____
2. திங்கள் – _____
திங்கள் – _____
3. ஓடு – _____
ஓடு – _____
4. நகை – _____
நகை – _____
விடைகள்:
1. ஆறு – நதி
ஆறு – எண்
2. திங்கள் – சந்திரன்
திங்கள் – வாரத்தின் இரண்டாம் நாள்
3. ஓடு – வீட்டின் கூரையில் பயன்படுவது
ஓடு – வேகமாக ஓடுதல்
4. நகை – புன்னகை
நகை – அணிகலன்
IX. புதிர்ச்சொல் கண்டுபிடி:
இச்சொல் மூன்றெழுத்துச் சொல். உயிர் எழுத்துக்கள் வரிசையில் முதல் எழுத்து இச்சொல்லின் முதல் எழுத்து. வல்லின மெய் எழுத்துகளின் வரிசையில் கடைசி எழுத்து இச்சொல்லின் இரண்டாம் எழுத்து. வாசனை என்னும் பொருள் தரும் வேறு சொல்லின் கடைசி எழுத்து இச்சொலின் மூன்றாம் எழுத்து. அஃது என்ன?
விடை:
அறம்
X. கட்டத்தில் உள்ள சொற்களைக் கொண்டு தொடர்கள் உருவாக்குக:
விடைகள்:
1. மாலையில் விளையாடுவோம்
2. பிறருக்கு உதவி புரிவோம்
3. பெரியோரை வணங்குவோம்
4. நூல் பல கற்போம்
5. உடற்பயிற்சி செய்வோம்
6. அதிகாலையில் எழுவோம்
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here
Visit & Join In Our Telegram Group: Click Here