support@techeditz2utnpsc.com | 8300-921-521
திருக்குறள்
Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 7 இயற்கை – அணிநிழல் காடு “திருக்குறள்”
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. வாய்மை எனப்படுவது _____.
அ) அன்பாகப் பேசுதல்
ஆ) தீங்குதராத சொற்களைப் பேசுதல்
இ) தமிழ்ல் பேசுதல்
ஈ) சத்தமா பேசுதல்
2. செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும் _____.
அ) மன்னன்
ஆ) பொறாமை இல்லாதவன்
இ) பொறாமை உள்ளவன்
ஈ) செல்வந்தன்
3. பொருட்செல்வம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) பொரு + செல்வம்
ஆ) பொருட் + செல்வம்
இ) பொருள் + செல்வம்
ஈ) பொரும் + செல்வம்
4. யாதெனில் என்னும் சொல்லை பிரித்து எழுதக்கிடைப்பது _____.
அ) யா + எனில்
ஆ) யாது + தெனில்
இ) யா + தெனில்
ஈ) யாது + எனில்
5. தன் + நெஞ்சு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _____.
அ) தன்நெஞ்சு
ஆ) தன்னெஞ்சு
இ) தானெஞ்சு
ஈ) தனெஞ்சு
6. தீது + உண்டோ என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _____.
அ) தீதுண்டோ
ஆ) தீதுஉண்டோ
இ) தீதிண்டோ
ஈ) தீயுண்டோ
II. சிறந்த அரசின் பணிகளை வரிசைப்படுத்தி எழுதுக:
அ) பொருளைப் பிரித்துச் செலவு செய்தல்.
ஆ) பொருள் வரும் வழிகளை அறிதல்.
இ) சேர்த்த பொருளைப் பாதுகாத்தல்.
ஈ) பொருள்களைச் சேர்த்தல்.
விடைகள்:
1. பொருள் வரும் வழிகளை அறிதல்.
2. பொருள்களைச் சேர்த்தல்.
3. சேர்த்த பொருளைப் பாதுகாத்தல்.
4. பொருளைப் பிரித்துச் செலவு செய்தல்.
III. கீழ்க்காணும் சொற்களைக் கொண்டு திருக்குறள் அமைக்க:
விடைகள்:
1. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.
2. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை
IV. பின்வரும் பத்திக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுக்க:
அறவழி என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர் தேசத்தந்தை காந்தியடிகள். அவர் தம் சிறு வயதில் ‘அரிச்சந்திரன்’ நாடகத்தைப் பார்த்தார் . அதில் அரிச்சந்திரன் என்னும் மன்னர் ‘பொய் பேசாமை ’ என்னும் அறத்தை எத்தகைய சூழ்நிலையிலும் தவறாமல் கடைப்பிடித்தார். இந்த நாடகத்தைக் கண்ட காந்தியடிகள் தாமும் பொய்யே பேசாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டார் . அதனைத் தம் வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார். இப்பண்பே காந்தியடிகள் எல்லார் இதயத்திலும் இடம் பிடிக்கக் காரணமாக அமைந்தது.
1. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
2. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
3. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.
விடைகள்:
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here
Visit & Join In Our Telegram Group: Click Here