support@techeditz2utnpsc.com | 8300-921-521
திருக்குறள்
Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 2 நாகரிகம் பண்பாடு – பாடறிந்து ஒழுகுதல் “திருக்குறள்”
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. விருந்தினரின் முகம் எப்போது வாடும்?
அ) நம் முகம் மாறினால்
ஆ) நம் வீடு மாறினால்
இ) நாம் நன்கு வரவேற்றால்
ஈ) நம் முகவரி மாறினால்
2. நிலையான செல்வம் _____.
அ) தங்கம்
ஆ) பணம்
இ) ஊக்கம்
ஈ) ஏக்கம்
3. ஆராயும் அறிவு உடையவர்கள் _____ சொற்களைப் பேச மாட்டார்.
அ) உயர்வான
ஆ) விலையற்ற
இ) பயன்தராத
ஈ) பயன்உடைய
4. “பொருளுடைமை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _____.
அ) பொருளு+டைமை
ஆ) பொரு+ளுடைமை
இ) பொருள்+உடைமை
ஈ) பொருள்+ளுடைமை
5. “உள்ளுவது + எல்லாம்” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _____.
அ) உள்ளுவதுஎல்லாம்
ஆ) உள்ளுவதெல்லாம்
இ) உள்ளுவத்தெல்லாம்
ஈ) உள்ளுவதுதெல்லாம்
6. “பயன் + இலா” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _____.
அ) பயனிலா
ஆ) பயன்னில்லா
இ) பயன்இலா
ஈ) பயன்இல்லா
II. எதுகை மோனைச் சொற்களை எடுத்து எழுதுக:
உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.
விடைகள்:
மோனைச் சொற்கள்:
உள்ளுவது – உயர்வுள்ளல்
தள்ளினும் – தள்ளாமை
எதுகைச் சொற்கள்:
உள்ளுவது – தள்ளினும் – தள்ளாமை
III. இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக:
1. பணிவுடையன் ஆதல் இன்சொலன் ஒருவற்கு
மற்றுப் பிற அணியல்ல
2. உள்ளுவது உயர்வுள்ளல் எல்லாம் மற்றது
தள்ளாமை தள்ளினும் நீர்த்து.
விடைகள்:
1. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
2. உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளாமை தள்ளினும் நீர்த்து.
IV. “ஊக்கமது கைவிடேல்” என்பது ஒளவையாரின் ஆத்திச்சூடி. இவ்வரியோடு தொடர்புடைய திருக்குறளை தேர்ந்தெடுக்க:
1. விருந்து பிறத்தாத் தாணுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டாற்பாற் அன்று
2. உள்ளம் உடைமை உடைமை பொருடைமை
நில்லாது நீங்கி விடும்
3. சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயன்இலாச் சொல்
விடைகள்:
உள்ளம் உடைமை உடைமை பொருடைமை
நில்லாது நீங்கி விடும்
V. பின்வரும் கதைக்குப் பொருத்தமான திருக்குறளை தேர்ந்தெடுக்க:
வீட்டிற்குள் வந்த வேலவனைத் தந்தை அழைத்தார். “உங்கள் பள்ளியில் பேச்சுப்போட்டி நடப்பதாக கூறினாயே, பெயர் கொடுத்து விட்டாயா?” என்று கேட்டார். “இல்லையப்பா அமுதன் என்னை விட நன்றாகப் பேசுவான். அவனுக்குதான் பரிசு கிடைக்கும். எனவே நான் பெயர் கொடுக்கவில்லை” என்றான் வேலன். “போட்டியில் வெற்றியும் தோல்வியும் இயல்புதான். அதற்காகப் போட்டியிடாமல் விலகக் கூடாது. நாம் எந்த அளவு ஊக்கத்துடன் செயல்படுகிறோமோ அந்த அளவிற்கு வெற்றி கிடைக்கும். எனவே நீ போட்டியில் கலந்து கொள்” என்றார் அப்பா. உற்சாகம் அடைந்த வேலன். ”நாளை பெயர் கொடுத்து விடுகிறேன் அப்பா” என்றான்
1. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
2. வெள்ளத் அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு
3. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்
விடைகள்:
வெள்ளத் அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here
Visit & Join In Our Telegram Group: Click Here