சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள்

Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 2 தொழில் வணிகம் – கூடித் தொழில் செய் “சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள்”

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. என் வீடு _____ உள்ளது. (அது / அங்கே)
2. தம்பி _____ வா. (இவர் / இங்கே)
3. நீர் _____ தேங்கி இருக்கிறது? (அது / எங்கே)
4. யார் _____ தெரியுமா? (அவர்/ யாது)
5. உன் வீடு _____ அமைந்துள்ளது? (எங்கே/ என்ன)

விடைகள்:
1. அங்கே
2. இங்கே
3. எங்கே
4. அவர்
5. எங்கே

II. பின்வரும் கட்டங்களில் உள்ள சொற்களைச் கொண்டு சொற்றொடர்கள் அமைக்க:

நான் ஊருக்கு சென்றாய்
நீ சென்றார்
அவன் சென்றேன்
அவள் சென்றான்
அவர் சென்றாள்

விடைகள்:
1. நான் ஊருக்கு சென்றேன்
2. நீ ஊருக்கு சென்றாய்
3. அவள் ஊருக்கு சென்றான்
4. அவள் ஊருக்கு சென்றாள்
5. அவர் ஊருக்கு சென்றார்

III. அடைப்புக்குள் உள்ள சொல்லை தக்க இடத்தில் சேர்த்து எழுதுங்கள்:
1. நீங்கள் வரும்போது எனக்குப் புத்தகம் வாங்கி வாருங்கள். (ஒரு)
2. நாம் உரங்கள் தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும். (இயற்கை)
3. நான் சொன்ன வேலையை அக்கறையுடன் செய்திருக்கிறார்கள் (மிகுந்த)

விடைகள்:
1. நீங்கள் வரும்போது எனக்கு ஒரு புத்தகம் வாங்கி வாருங்கள்
2. நாம் இயற்கை உரங்கள் தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும்
3. நான் சொன்ன வேலையை மிகுந்த அக்கறையுடன் செய்திருக்கிறார்கள்

ADVERTISEMENT

IV. கீழ்கண்ட பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக:
மனிதர்களுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் நோக்கம் ஆகும். ஓர் இடத்தில் உற்பத்தியாகும் பொருள்களைப்ப பல் இடங்களுக்கு அனுப்புவது பல இடங்களில் கிடைக்கும் பொருள்களை ஓர் இடத்தல் கிடைக்கச் செய்வது வணிகம் ஆகும்.

கிடைக்கும் பொருள்களின் மதிப்பைக் கூட்டி புதிய பொருளாக மாற்றுவத சிறந்த வணிகமாகும். சான்றாகக் கல் என்பது விற்பனைப் பொருளன்று. ஆனால் அதனைச் செதுக்கிச் சிலையாக மாற்றலாம். உதிரும் கல்தூளைக் கோலமாவாக மாற்றலாம். இதனை மதிப்புக் கூட்டுதல் என்பர்.

1. கிடைக்கும் பொருள்களின் _____ கூட்டி புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகமாகும்.
அ) அளவை
ஆ) மதிப்பை
இ) எண்ணிக்கையை
ஈ) எடையை
2. சிலை செதுக்கப்படும்போது உதிரும் கல்தூளைக் _____ மாற்றலாம்.
3. வணிகத்தின் நோக்கம் என்ன?
4. மதிப்புக் கூட்டுதல் என்றால் என்ன?
5. இப்பத்திக்கு ஏற்ற தலைப்பை எழுதுக

விடைகள்:
1. மதிப்பை
2. கோலமாவாக
3. மனிதர்களுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் நோக்கம் ஆகும்.
4. கல் என்பது விற்பனைப் பொருளன்று. ஆனால் அதனைச் செதுக்கிச் சிலையாக மாற்றலாம். உதிரும் கல்தூளைக் கோலமாவாக மாற்றலாம். இதனை மதிப்புக் கூட்டுதல் என்பர்.
5. வணிகத்தின் உத்தி

V. விடுகதைக்கு விடை காணுங்கள்:
(கப்பல், ஏற்றுமதி, இறக்குமதி, தராசு, நெல்மணி, குதிரை)

1. தனிஆளாய் இருந்தால் நடுநிலையாய் இருந்திடுவான் யாரும் வந்து அமர்ந்தால் ஏற்றம் இறக்கம் காட்டிடுவான் அவன் யார்?
2. தண்ணீரில் கிடப்பான்; தள்ளாடித் தள்ளாடி நடப்பான்; காலில்லாத அவன் யார்?
3. பேசமுடியாத ஓட்டப்பந்த வீரனுக்கு வாய்க்கு மட்டும் பூட்டு அவன் யார்?
4. இயந்திரத்தால் செய்ய முடியாத மணி; ஊசி நூலில் கோர்க்க முடியாத மணி; பூமியில் விளையும் மணி; பூவுலகத்தார் விரும்பும் மணி. அது எந்த மணி?
5. ஒருமதி வெளியே போகும்; ஒருமதி உள்ளே வரும்; இருமதியும் சேர்ந்துவிட்டால் பல நதியும் சேர்ந்து வரும். அவை என்ன?

ADVERTISEMENT

விடைகள்:
1. தராசு
2. கப்பல்
3. குதிரை
4. நெல்மணி
5. ஏற்றுமதி, இறக்குமதி

VI. நவமணிகளை அகர வரிசைப்படுத்தி எழுதுக:
நீலம், கோமேதகம், மாணிக்கம், வைரம், பவளம், வைடூரியம், முத்து புஷ்பராகம், மரகதம்

விடைகள்:
கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம்

VII. குறுக்கெழுத்து புதிர்:

1. மு

டி ன்

ல்

ADVERTISEMENT
2. சு ட் டு

ம்

லை

டை

ட்

3. வே

ADVERTISEMENT
ரை தி 4. கு

மூ

லி

னி

று ற் மா ண்

5. ப

இடமிருந்து வலம்
1. நானிலம் படைத்தவன் பாடலை எழுதியவர் _____
2. சுட்டிக்காட்டப் பயன்படுவது _____ எழுத்து

விடைகள்:
1. முடியரசன்
2. சுட்டு

ADVERTISEMENT

வலமிருந்து வலம்
4. அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது _____
5. ஒரு பொருளைக் கொடுத்து வேறு பொருளைப் பெறும் முறை _____

விடைகள்:
4. குதிரை
5. பண்டமாற்று

மேலிருந்து வலம்
1. காடும் காடு சார்ந்த இடமும் _____
3. தோட்டத்தைச் சுற்றி _____ அமைக்க வேண்டும்

விடைகள்:
1. முல்லை
3. வேலி

கீழிருந்து வலம்
4. மீனவருக்கு மேகம் _____ போன்றது
5. உடலுக்குப் போர்வையாக அமைவது _____

விடைகள்:
4. குடை
5. பனிமூட்டம்

ADVERTISEMENT

Visit Our YouTube Channel For More Free Videos: Click Here

Visit & Join In Our Telegram Group: Click Here


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?