குற்றியலுகரம், குற்றியலிகரம்

Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 7 மொழி – அமுதத்தமிழ் “குற்றியலுகரம், குற்றியலிகரம்”

I. குற்றியலுகர வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக:
ஆறு, எஃகு, கரும்பு, விறகு, உழக்கு, எட்டு, ஏடு, பந்து, காசு, கொய்து

விடைகள்:
நெடில் தொடர் – ஆறு, ஏடு, காசு
ஆய்தத் தொடர் – எஃகு
உயிர்த் தொடர் – விறகு
வன் தொடர் – உழக்கு, எட்டு
மென் தொடர் – பந்து, கரும்பு
இடைத் தொடர் – கொய்து

II. பொருந்தாத சொற்களை எடுத்து எழுதுக:
1. பசு, விடு, ஆறு, கரு
2. பாக்கு, பஞ்சு, பாட்டு, பத்து
3. ஆறு, மாசு, பாகு, அது
4. அரசு, எய்து, மூழ்கு, மார்பு
5. பண்பு, மஞ்சு, கண்டு, எஃகு

விடைகள்:
1. கரு
2. பஞ்சு
3. அது
4. அரசு
5. எஃகு

III. கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு ஏற்பத் தொடரில் அழுத்தம் தர வேண்டிய சொற்களை எடுத்து எழுதுக:

கோதை கவிதையைப் படித்தாள்.

ADVERTISEMENT

விடைகள்:
வினா – அழுத்தம் தர வேண்டிய சொல்
கோதை எதைப் படித்தாள்? – எதைப்
கவிதையைப் படித்தது யார்? – யார்
கோதை கவிதையை என்ன செய்தாள்? – என்ன

IV. படத்திற்குப் பொருத்தமான திணையை எழுதுக:

விடைகள்:
1. உயர்திணை – ஆண்பால்
2. அஃறிணை – ஒன்றன்பால்
3. உயர்திணை – பெண்பால்

V. கீழ்க்காணும் சொற்களை உயர்திணை, அஃறிணை என வகைப்படுத்துக:
வயல், முகிலன், குதிரை, கயல்விழி, தலைவி, கடல், ஆசிரியர், புத்தகம், சுரதா, மரம்

விடைகள்:
உயர்திணை:
1. முகிலன்
2. கயல்விழி
3. தலைவி
4. ஆசிரியர்
5. சுரதா

ADVERTISEMENT

அஃறிணை:
1. வயல்
2. குதிரை
3. கடல்
4. புத்தகம்
5. மரம்

VI. தொகைச் சொற்களை விரித்து எழுதுக:

விடைகள்:

இருதிணை : உயர்திணை, அஃறிணை
முக்கனி : மா, பலா, வாழை
முத்தமிழ் : இயல், இசை, நாடகம்
நாற்றிசை : கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு
ஐவகைநிலம் : குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
அறுசுவை : இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு

VII. கட்டங்களிலுள்ள எழுத்துகளை மாற்றி, மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் எழுதினால் ஒரே சொல் வருமாறு கட்டங்களில் எழுதுக:

ADVERTISEMENT

விடைகள்:
1. மதகு
2. தந்தி
3. குதிரை

VIII. இரு பொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக:
(எ.கா.)
அரசுக்குத் தவறாமல் _____ செலுத்த வேண் டும்.
ஏட்டில் எழுதுவது _____ வடிவம்.

விடை:
வரி

1. மழலை பேசும் _____ அழகு.
இனிமைத் தமிழ் _____ எமது.
2. அன்னை தந்தையின் கைப் பிடித்துக் குழந்தை _____ பழகும்.
அறிஞர் அண்ணாவின் சிறப்பு அவரது அடுக்கு மொழி _____.
3. நீ அறிந்ததைப் பிறருக்குச் _____.
எழுத்துகள் தொடர்ந் து நின்று பொருள் தருவது _____.
4. உழவர்கள் நாற்று _____ வயலுக்குச் செல்வர்.
குழந்தையை மெதுவாக _____ என்போம்.
5. நீதி மன்றத்தில் கொடுப்பது _____.
நீச்சத் தண்ணி குடி’ என்பது பேச்சு _____.

விடைகள்:
1. மொழி
2. நடை
3. சொல்
4. நட
5. வழக்கு


Visit Our YouTube Channel For More Free Videos: Click Here

ADVERTISEMENT

Visit & Join In Our Telegram Group: Click Here


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?