நால்வகைக் குறுக்கங்கள்

Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 7 இயற்கை – அணிநிழல் காடு “நால்வகைக் குறுக்கங்கள்”

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு _____.
அ) அரை
ஆ) ஒன்று
இ) ஒன்றரை
ஈ) இரண்டு

2. மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல் _____.
அ) போன்ம்
ஆ) மருண்ம்
இ) பழம் விழுந்தது
ஈ) பணம் கிடைத்தது

3. சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது _____.
அ) ஐகாரக் குறுக்கம்
ஆ) ஔகாரக் குறுக்கம்
இ) மகரக் குறுக்கம்
ஈ) ஆய்தக் குறுக்கம்

II. எதிர்ப்பாலுக்குரிய பெயர்களை எழுதுக:
1. மகளிர் x _____
2. அரசன் x _____
3. பெண் x _____
4. மாணவன் x _____
5. சிறுவன் x _____
6. தோழி x _____

விடைகள்:
1. ஆடவர்
2. அரசி
3. ஆண்
4. மாணவி
5. சிறுமி
6. தோழன்

III. படத்திற்குப் பொருத்தமான பாலை எழுதுக:

ADVERTISEMENT

விடைகள்:
2. ஆண்பால்
3. ஒன்றன்பால்
4. பெண்பால்
5. பலர்பால்
6. பலவின்பால்

IV. பிழையைத் திருத்திச் சரியாக எழுதுக:
1. கண்ணகி சிலம்பு அணிந்தான்.
2. கோவலன் சிலம்பு விற்கப் போனாள்.
3. அரசர்கள் நல்லாட்சி செய்தார்.
4. பசு கன்றை ஈன்றன.
5. மேகங்கள் சூழ்ந்து கொண்டது.
6. குழலி நடனம் ஆடியது.

விடைகள்:
1. கண்ணகி சிலம்பு அணிந்தாள்.
2. கோவலன் சிலம்பு விற்கப் போனான்
3. அரசர்கள் நல்லாட்சி செய்தனர்.
4. பசு கன்றை ஈன்றது.
5. மேகங்கள் சூழ்ந்து கொண்டன
6. குழலி நடனம் ஆடினாள்

V. வட்டத்திலுள்ள எழுத்துகளைப் பயன்படுத்திச் சொற்களை அமைக்க:

ADVERTISEMENT

விடைகள்:
1. கல்
2. புதையல்
3. இலை
4. கடலை
5. கடல்
6. கதை
7. புல்
8. இயல்
9. தையல்
10. கலை
11. இல்லை
12. கயல்
13. புயல்
14. இயல்பு

VI. சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் அமைக்க:

விடைகள்:
1. வாழை + காய் = வாழைக்காய்
2. வாழை + பழம் = வாழைப்பழம்
3. குருவி + கூடு = குருவிக்கூடு
4. குருவி + கூட்டம் = குருவிக்கூட்டம்
5. விளையாட்டு + திடல்= விளையாட்டுத்திடல்
6. விளையாட்டு + போட்டி = விளையாட்டுப்போட்டி
7. தயிர் + கூடு = தயிரக்கூடு
8. தயிர் + சோறு = தயிர்ச்சோறு
9. கொய்யா + காய் = கொய்யாக்காய்
10. கொய்யா + பழம் = கொய்யாப்பழம்
11. அவரை + காய் = அவரைக்காய்
12. பாட்டு + போட்டி = பாட்டுப்போட்டி
13. பறவை + கூடு = பறைவக்கூடு
14. பறவை + கூட்டம் = பறவைக்கூட்டம்

VII. விடுகதைகளுக்கு விடை எழுதுக:
1. மரம் விட்டு மரம் தாவுவேன்; குரங்கு அல்ல. வளைந்த வாலுண்டு; புலி அல்ல. கொட்டைகளைக் கொறிப்பேன்; கிளி அல்ல. முதுகில் மூன்று கோடுகளை உடையவன். நான் யார்?
2. என் பெயர் மூன்று எழுத்துகளைக் கொண்டது. முதலெழுத்தை நீக்கினால் மறைப்பேன். இரண்டாம் எழுத்தை நீக்கினால் குரைப்பேன். மூன்றாம் எழுத்தை நீக்கினால் குதிப்பேன். நான் யார்?
3. வெள்ளையாய் இருப்பேன்; பால் அல்ல. மீன் பிடிப்பேன்; தூண்டில் அல்ல தவமிருப்பேன்; முனிவரல்ல நான் யார்?

விடைகள்:
1. அணில்
2. குதிரை
3. கொக்கு

ADVERTISEMENT

Visit Our YouTube Channel For More Free Videos: Click Here

Visit & Join In Our Telegram Group: Click Here


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?