support@techeditz2utnpsc.com | 8300-921-521
காடு
Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 7 இயற்கை – அணிநிழல் காடு “காடு”
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. வாழை, கன்றை _____.
அ) ஈன்றது
ஆ) வழங்கியது
இ) கொடுத்தது
ஈ) தந்தது
2. காடெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) காடு + டெல்லாம்
ஆ) காடு + எல்லாம்
இ) கா + டெல்லாம்
ஈ) கான் + எல்லாம்
3. கிழங்கு + எடுக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) கிழங்குஎடுக்கும்
ஆ) கிழங்கெடுக்கும்
இ) கிழங்குடுக்கும்
ஈ) கிழங்கொடுக்கும்
II. நயம் அறிக:
பாடலிலுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.
மோனைச் சொற்கள்:
கார்த்திகை – காடெல்லாம்
பார்த்திட – பார்வை
காடு – காய்கனி
குரங்கு – குடியிருக்கும்
பச்சை – பன்றி
நச்சர – நரியெலாம்
சிங்கம் – சிறுத்தை
எதுகைச் சொற்கள்:
கார்த்திகை – பார்த்திட – பார்வை
களித்திடவே – குளிர்ந்திடவே
குரங்கு – மரங்கள்
சிங்கம் – எங்கும்
பச்சை – நச்சர
இயைபுச் சொற்கள்:
பொருள்கொடுக்கும் – ஈன்றெடுக்கும் – நிழல் கொடுக்கும்
குடியிருக்கும் – கனிபறிக்கும் – தடையிருக்கும்
மயில்நடிக்கும் – கிழங்கெடுக்கும்
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here
Visit & Join In Our Telegram Group: Click Here