support@techeditz2utnpsc.com | 8300-921-521
இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
Samacheer Book Back Questions And Answers For வரலாறு Standard 7 Term 1 “இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்”
I. சரியான விடையைத் தேர்வு செய்க:
1. _____ என்பவை பாறைகள், கற்கள், கோவில் சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றின் கடினமான மேற்பரப்பின் மீது செதுக்கப்படும் வாசகங்களாகும்.
அ) காலவரிசையிலான நிகழ்வுப்பதிவுகள்
ஆ) பயணக்குறிப்புகள்
இ) நாணயங்கள்
ஈ) பொறிப்புகள்
2. கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் _____ ஆகும்.
அ) வேளாண்வகை
ஆ) சாலபோகம்
இ) பிரம்மதேயம்
ஈ) தேவதானம்
3. _____ களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலமென அறியப்படுகிறது.
அ) சோழர்
ஆ) பாண்டியர்
இ) ராஜபுத்திரர்
ஈ) விஜயநகர அரசர்கள்
4. முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களைக் கூறும் நூல் _____ ஆகும்.
அ) அயினி அக்பரி
ஆ) தாஜ் – உல் – மா – அசிர்
இ) தசுக் – இ – ஜாஹாங்கீரி
ஈ) தாரிக் – இ – பெரிஷ்டா
5. அரேபியாவில் பிறந்து இந்தியாவிற்கு வந்த மொராக்கோ நாட்டு அறிஞர் _____ ஆவார்.
அ) மார்க்கோபோலோ
ஆ) அல் – பரூனி
இ) டோமிங்கோ பயஸ்
ஈ) இபன் பதூதா
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. _____ கல்வெட்டு ஒரு பிரம்மதேயக் கிராமத்தின் நிர்வாகம் குறித்து விவரித்துக் கூறுகிறது.
2. தன்னுடைய தங்க நாணயங்கள் மீது பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதித்து தன்னுடைய பெயரையும் பொறித்தவர் _____ ஆவார்.
3. ஒரு _____ என்பது 3.6 வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டிருந்தது.
4. அடிமை வம்சத்தைச் சேர்ந்த சுல்தான் நஸ்ருதீன் மாமூதுவால் ஆதரிக்கப்பட்டவர் _____ ஆவார்.
5. கி.பி 1420 இல் விஜயநகருக்கு வருகை புரிந்த இத்தாலியப் பயணி _____ ஆவார்.
விடைகள்:
1. உத்திரமேரூர்
2. முகமது கோரி
3. ஜிட்டல்
4. மின்கஜ் உஸ் சிராஜ்
5. நிகோலோ கோண்டி
III. பொருத்துக:
1. கஜுராகோ அ. ஒடிசா
2. கொனாரக் ஆ. ஹம்பி
3. தில்வாரா இ. மத்தியப்பிரதேசம்
4. விருப்பாக்சா ஈ. ராஜஸ்தான்
விடைகள்:
1. இ
2. அ
3. ஈ
4. ஆ
IV. சரியா? தவறா?
1. பள்ளிச்சந்தம் என்பது சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலமாகும்.
2. நாணயங்களிலுள்ள உலோகங்களின் கலவை பேரரசின் அரசியல் நிலை குறித்த தகவல்களை நமக்கு வழங்குகின்றன.
3. தாமிரத்தின்விலை அதிகமாக இருந்ததால் அரசு ஆணைகளையும் அரசவைநிகழ்வுகளையும் பதிவு செய்வதற்கு குறைந்த செலவிலான பனையோலைகளும் காகிதமும் பயன்படுத்தப்பட்டன.
4. டோமிங்கோ பயஸ் எனும் போர்த்துகீசியப்பயணி கி.பி 1522 இல் சோழப்பேரரசுக்கு வருகை புரிந்தார்.
விடைகள்:
1. சரி
2. தவறு
3. சரி
4. தவறு
V. கூற்று மற்றும் காரணம்:
1) கூற்றைக் காரணத்தோடு பொருத்துக. பொருத்தமான விடையை (✓) இட்டுக் காட்டவும்.
கூற்று: முகமதுகோரி தனது தங்க நாணயங்களில் பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதிப்பித்தார்.
காரணம்: இத்துருக்கிய படையெடுப்பாளர் மத விசயங்களில் தாராள மனப்பான்மை கொண்டவராய் இருந்தார்.
அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை
இ) கூற்று தவறு, காரணம் சரி.
ஈ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு.
2) தவறான இணையைக் கண்டறியவும்:
அ) மதுரா விஜயம் – கங்கா தேவி
ஆ) அபுல் பாசல் – அயினி அக்பரி
இ) இபன் பதூதா – தாகுயூக் – இ – ஹிந்த்
ஈ) அமுக்தமால்யதா – கிருஷ்ணதேவராயர்
3) பொருந்தாததைக் கண்டுபிடி.
அ) பொறிப்புகள்
ஆ) பயணக்குறிப்புகள்
இ) நினைவுச் சின்னங்கள்
ஈ) நாணயங்கள்
VI. ஒரிரு வாக்கியங்களில் பதில் அளிக்கவும்:
1. நாலாயிர திவ்விய பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்?
2. ‘தசுக்’ எனும் வார்த்தையின் பொருள் யாது?
3. ஜஹாங்கீர் எழுதிய நினைவுக் குறிப்பின் பெயர் என்ன?
4. வரலாற்றை அறிந்துகொள்வதற்கான இருவகைச் சான்றுகளைக் கூறுக.
விடைகள்:
1. நாதமுனி
2. வாழ்க்கை நினைவுகள்
3. தசுக்-இ-ஜாஹாங்கீர்
4. முதல் நிலைச் சான்றுகள், இரண்டாம் நிலைச் சான்றுகள்
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here