இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

Samacheer Book Back Questions And Answers For வரலாறு Standard 6 Term 3 “இந்தியா – மௌரியருக்குப் பின்னர்”

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
1. கடைசி மௌரிய அரசரைக் கொன்றவர் _____.
அ) புஷ்யமித்ரர்
ஆ) அக்னிமித்ரர்
இ) வாசுவேதர்
ஈ) நாராயணர்

2. சாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர் _____.
அ) சிமுகா
ஆ) சதகர்ணி
இ) கன்கர்
ஈ) சிவாஸ்வதி

3. குஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் _____.
அ) கனிஷ்கர்
ஆ) முதலாம் கட்பிசஸ்
இ) இரண்டாம் கட்பிசஸ்
ஈ) பன் – சியாங்

4. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் _____ பகுதியில் கண்டரா சமஸ்கிருதப்பள்ளி தழைத் தோங்கியது.
அ) தக்காணம்
ஆ) வடமேற்கு இந்தியா
இ) பஞ்சாப்
ஈ) கங்கை பள்ளத்தாக்கு சமவெளி

5. சாகர்கள் _____ நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.
அ) சிர்கப்
ஆ) தட்சசீலம்
இ) மதுரை
ஈ) புருஷபுரம்

II. கூற்றைக் காரணத்துடன் பொருத்திப் பார்த்து சரியான விடையைக் கண்டுபிடிக்கவும்:
1. கூற்று: இந்தோ – கிரேக்கர்களின், இந்தோ – பார்த்தியர்களின் குடியேற்றங்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நிறுவப்பட்டன.
காரணம்: குடியேறிய பாக்டீரியர்களும் பார்த்தியர்களும் படிப்படியாக உள்ளூர் மக்களுடன் திருமண உறவு கொண்டு இரண்டறக் கலந்தனர்.
அ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ. கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ. கூற்று சரி; ஆனால் காரணம் தவறு
ஈ. கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

ADVERTISEMENT

2. கூற்று 1: இந்தோ – கிரேக்க ஆட்சியாளர்கள் அச்சு முறையை அறிமுகம் செய்து சின்னங்களும், உருவங்களும், பெயர்களும் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டனர்.
கூற்று 2: இந்தோ – கிரேக்கர்களின் ஆட்சியைக் குஷாணர் முடித்து வைத்தனர்.
அ) கூற்று 1 தவறு, ஆனால் கூற்று 2 சரி
ஆ) கூற்று 2 தவறு, ஆனால் கூற்று 1 சரி
இ) இரண்டு கூற்றுகளுமே சரி
ஈ) இரண்டு கூற்றுகளுமே தவறு

3. பொருந்தாததை வட்டமிடுக.
புஷ்யமித்ரர், வாசுதேவர், சிமுகா, கனிஷ்கர்

4. ஒரு வார்த்தையில் பதில் எழுதவும்
i. கடைசி சுங்க அரசர் யார்?
ii. சாகர்களில் மிக முக்கியமான, புகழ்பெற்ற அரசர் யார்?
iii. மகதத்தில் கன்வ வம்சத்தை நிறுவியவர் யார்?
iv. கோண்டோ பெர்னஸைக் கிறித்துவ மதத்திற்கு மாற்றியவர் யார்?

விடைகள்:
i. தேவபூதி
ii. ருத்ரதாமன்
iii. வாசுதேவர்
iv. புனித தாமஸ்

III. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. இந்தோ – பார்த்திய அரசை நிறுவியவர் _____.
2. தெற்கே _____ இறப்பிற்குப் பின்னர் சாதவாகனர் சுதந்திர அரசர்களாயினர்
3. ஹாலா எழுதிய நூலின் பெயர் _____.
4. _____ கன்வ வம்சத்தின் கடைசி அரசராவார்.
5. குஷாணர்களின் பிந்தைய தலைநகரம் _____ ஆகும்

விடைகள்:
1. கோண்டோ பெர்னஸ்
2. அசோகரின்
3. சட்டசாய் (சப்தசதி)
4. சுசர்மன்
5. பெஷாவர் (புருஷபுரம்)

ADVERTISEMENT

IV. சரியா தவறா என எழுதுக:
1. மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும் மகதம் தொடர்ந்து ஒரு பௌத்த பண்பாட்டு மையமாகத் திகழ்ந்தது.
2. காரவேலரைப் பற்றி அதிகமான செய்திகளை நாம் ஹதிகும்பா கல்வெட்டிலிருந்து பெறுகிறோம்
3. குந்தல சதகர்ணி, சாதவாகனவம்சத்தின், பத்தாவது அரசராவார்.
4. ‘புத்த சரிதம்’ அஸ்வகோஷரால் எழுதப்பட்டது.

விடைகள்:
1. சரி
2. சரி
3. தவறு
4. சரி

V. பொருத்துக:
1. பதஞ்சலி                                   அ. கலிங்கம்
2. அக்னிமித்ரர்                          ஆ. இந்தோ-கிரேக்கர்
3. அரசர் காரவேலர்                 இ. இந்தோ-பார்த்தியர்
4. டெமிட்ரியஸ்                           ஈ. இரண்டாம் சமஸ்கிருத இலக்கண ஆசிரியர்
5. கோண்டோ பெர்னெஸ்     உ. மாளவிகாக்னிமித்ரம்

விடைகள்:
1. ஈ
2. உ
3. அ
4. ஆ
5. இ

VI. பின்வருவனவற்றில் தவறான கூற்றைக் கண்டறிக:
i. குஷாணர் வடமேற்குச் சீனாவில் வாழ்ந்த யூச்-சி பழங்குடி மக்களின் ஒரு பிரிவினரை உருவாக்கினார்.
ii. கனிஷ்கர் சமண மதத்தை அரசு மதமாக்கிப் பல மடாலயங்களைக் கட்டினார்.
iii. சாஞ்சியின் மாபெரும் ஸ்தூபியும் அதன் சுற்றுவேலியும் சுங்கர் காலத்தைச் சேர்ந்தவை.
iv. பன்-சியாங் சீனத் தளபதியாவார். இவர் கனிஷ்கரால் தோற்கடிக்கப்பட்டார்.


Visit Our YouTube Channel For More Free Videos: Click Here

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?