தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

Samacheer Book Back Questions And Answers For வரலாறு Standard 6 Term 1 “தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்”

I. சரியான விடையை தேர்ந்தெடு:
1. 6500 ஆண்டுகளுக்கு பழமையான நாகரிகத்தின் நகரம்
அ) ஈராக்
ஆ) சிந்துவெளி
இ) தமிழகம்
ஈ) தொண்டைமண்டலம்

2. இவற்றுள் எது தமிழக நகரம்?
அ) ஈராக்
ஆ) ஹரப்பா
இ) மொகஞ்சதாரோ
ஈ) காஞ்சிபுரம்

3. வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம்
அ) பூம்புகார்
ஆ) மதுரை
இ) கொற்கை
ஈ) காஞ்சிபுரம்

4. தமிழர்களின் நீர்மேலாண்மையை விளக்குவது
i) கல்லணை
ii) காஞ்சிபுர ஏரிகள்
iii) பராக்கிரம பாண்டியன் ஏரி
iv) காவிரிஆறு

அ) இவற்றில் i மட்டும் சரி
ஆ) ii மட்டும் சரி
இ) iii மட்டும் சரி
ஈ) i மற்றும் ii சரி

5. பின்வருவனவற்றுள் எது தொன்மையான நகரமல்ல?
அ) மதுரை
ஆ) காஞ்சிபுரம்
இ) பூம்புகார்
ஈ) சென்னை

ADVERTISEMENT

6. கீழடி அகழாய்வுகளுடன் தொடர்புடைய நகரம்
அ) மதுரை
ஆ) காஞ்சிபுரம்
இ) பூம்புகார்
ஈ) ஹரப்பா

II. கூற்றுக்கான காரணத்தை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடு:
1. கூற்று: பூம்புகார் நகரத்திலிருந்து அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதியும், இறக்குமதியும்
நடைபெற்றது.
காரணம்: வங்காளவிரிகுடா கடல் போக்குவரத்திற்கு ஏதுவாக அமைந்ததால் அண்டைய நாடுகளுடன் வணிகம் சிறப்புற்றிருந்தது.
அ) கூற்று சரி; காரணம் தவறு
ஆ) கூற்று சரி; கூற்றுக்கான காரணமும் சரி
இ) கூற்று தவறு; காரணம் சரி
ஈ) கூற்று தவறு; காரணம் தவறு

2. i) ‘திருநாவுக்கரசர், “கல்வியில் கரையில்” எனக் குறிப்பிட்ட நகரம் காஞ்சிபுரம்.
ii) இந்தியாவின் ஏழு புனிதத் தலங்களுள் ஒன்று என யுவான்சுவாங் குறிப்பிட்டது காஞ்சிபுரம்.
iii) “நகரங்களுள் சிறந்தது காஞ்சிபுரம்” என காளிதாசர் குறிப்பிட்டுள்ளார்.
அ) i மட்டும் சரி
ஆ) ii மட்டும் சரி
இ) iii மட்டும் சரி
ஈ) அனைத்தும் சரி

3.சரியான தொடரைக் கண்டறிக
அ) நாளங்காடி என்பது இரவு நேர கடை.
ஆ) அல்லங்காடி என்பது பகல் நேர கடை.
இ) ரோமானிய நாட்டு நாணயம் தயாரித்த தொழிற்சாலை கிடைத்தது பூம்புகார்.
ஈ) கொற்கை அருகில் உள்ள உவரியில் இருந்து முத்து ஏற்றுமதி செய்யப்பட்டது.

4. தவறான தொடரைக் கண்டறிக.
அ) மெகஸ்தனிஸ் தன்னுடைய பயணக் குறிப்புகளில் மதுரையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
ஆ) யுவான் சுவாங் தமிழ்நாட்டு நகரான காஞ்சிபுரத்திற்கு வந்தார்.
இ) கோவலனும், கண்ண கியும் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தனர்.
ஈ) ஈராக் நகரம் பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5. சரியான இணையைக் கண்டறிக.
அ) கூடல் நகர் – பூம்புகார்
ஆ) தூங்கா நகரம் – ஹரப்பா
இ) கல்வி நகரம் – மதுரை
ஈ) கோயில் நகரம் – காஞ்சிபுரம்

ADVERTISEMENT

6. தவறான இணையைக் கண்டறிக.
அ) வட மலை – தங்கம்
ஆ) மேற்கு மலை – சந்தனம்
இ) தென்கடல் – முத்து
ஈ) கீழ்கடல் – அகில்

III. கோடிட்ட இடத்தை நிரப்புக:
1. கைலாசநாதர் ஆலயத்தைக் கட்டியவர் _____.
2. கோயில் நகரம் என அழைக்கப்படுவது _____.
3.மாசாத்துவன் எனும் பெயர் தரும் பொருள் _____.

விடைகள்:
1. ராஜசிம்மன்
2. காஞ்சிபுரம்
3. பெரு வணிகன்

IV. சரியா? தவறா?
1. பூம்புகாரில் நடைபெற்ற அண்டைநாட்டு வணிகத்தின் மூலமாக பண்பாட்டு பரிமாற்றம் நடைபெற்றது.
2. மதுரையில் அல்லங்காடியில் பெண்கள் பயமின்றி இரவு நேரங்களில் பொருட்கள் வாங்கிச் சென்றனர்.
3. பல்லவர்கள் காலத்தில் எண்ணற்ற குடைவரைக் கோயில்கள் அமைக்கப்பட்டன.
4. போதிதர்மர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்.

விடைகள்:
1. சரி
2. சரி
3. சரி
4. சரி


Visit Our YouTube Channel For More Free Videos: Click Here

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?