support@techeditz2utnpsc.com | 8300-921-521

வரலாறு என்றால் என்ன?
Samacheer Book Back Questions And Answers For வரலாறு Standard 6 Term 1 “வரலாறு என்றால் என்ன?”
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. பழங்கால மனிதன் தனது உணவைச் சேரிக்க மேற்கொண்ட நடவடிக்கை
அ. வணிகம்
ஆ. வேட்டையாடுதல்
இ. ஓவியம் வரைதல்
ஈ. விலங்குககள் வளர்த்தல்
II. கூற்றையும் காரணத்தையும் பொருத்துக.
1 கூற்று: பழைய கற்கால மனிதர்கள் வேட்டையாடச் செல்லும்போது நாய்களை உடன் அழைத்துச் சென்றனர்
காரணம்: குகைகளில் பழைய கற்கால மனிதன் தங்கியிருந்தபோது, விலங்குகள் வருவதை நாய்கள் தமது மோப்ப சக்தியினால் அறிந்து அவனுக்கு உணர்த்தும்.
அ. கூற்று சரி, காரணம் தவறு
ஆ. கூற்று சரி, கூற்றுக்கான காரணமும் சரி
இ. கூற்று தவறு, காரணம் சரி
ஈ. கூற்று தவறு, காரணம் தவறு
2. பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் அகழாய்வுகள் மூலமாக தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. அப்பொருட்கள் அக்கால மக்களின் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொள்ளப் பாதுகாக்கப்படுகின்றன. இக்கூற்றுடன் தொடர்புடையது எது?
அ. அருங்காட்சியகங்கள்
ஆ. புதைபொருள் படிமங்கள்
இ. கற்கருவிகள்
ஈ. எலும்புகள்
3. தவறான வாக்கிய இணையைக் கண்டுபிடி
அ. பழைய கற்காலம் – கற்கருவிகள்
ஆ. பாறை ஓவியங்கள் – குகைச் சுவர்கள்
இ. செப்புத்தகடுகள் – ஒரு வரலாற்று ஆதாரம்
ஈ. பூனைகள் – முதலில் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு
4. தவறான வாக்கிய இணையைக் கண்டுபிடி
அ. பாறைகள் மற்றும் குகைகளில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.
ஆ. வேட்டையாடுதல் குறிப்பதாக ஓவியங்கள் இருந்தன.
இ. பழங்கால மனிதன் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வேட்டையாடுதல் எடுத்துரைப்பதற்காக வரைந்திருக்கலாம்.
ஈ. பல வண்ணங்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன
III. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. பழைய கற்கால மனிதன் பெரும்பாலும் வாழ்ந்த இடங்கள் _____.
2. வரலாற்றின் தந்தை _____.
3. பழைய கற்கால மனிதன் பழக்கிய முதல் விலங்கு _____.
4. கல்வெட்டுகள் _____ ஆதாரங்கள் ஆகும்.
5. அசோகச் சக்கரத்தில் _____ ஆரக்கால்கள் உள்ளன.
விடைகள்:
1. குகைகள்
2. ஹெரோடோஸ்
3. நாய்
4. தொல்பொருள்
5. 24
IV. சரியா? தவறா?:
1. பழைய கற்காலத்தைச் சார்ந்த கற்கருவிகள் சென்னைக்கு அருகில் உள்ள அத்திரம்பாக்கத்தில் கிடைத்துள்ளன.
2. பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் தொல்லியல் துறையினரால் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன
3. அசோகரது காலத்தில் புத்த சமயம் நாடு முழுவதும் பரவியது
விடைகள்:
1. சரி
2. சரி
3. சரி
V. பொருத்துக:
1. பாறை அ. செப்புத்தகடுகள் ஓவியங்கள்
2. எழுதப்பட்ட பதிவுகள் ஆ. மிகவும் புகழ்பெற்ற அரசர் பதிவுகள்
3. அசோகர் இ. தேவாரம்
4. மத சார்புள்ள இலக்கியம் ஈ. வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்வதற்கு உதவுகிறது
விடைகள்:
1. ஈ
2. அ
3. ஆ
4. இ
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here