support@techeditz2utnpsc.com | 8300-921-521
தேசியச் சின்னங்கள்
Samacheer Book Back Questions And Answers For இந்திய அரசியலமைப்பு Standard 6 Term 2 “தேசியச் சின்னங்கள்”
I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
1. தேசிய பாடலான வந்தே மாதரத்தை இயற்றியவர் _____
அ) பிங்காலி வெங்கையா
ஆ) ரவீந்திரநாத் தாகூர்
இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி
ஈ) காந்திஜி
2. இந்தியாவின் தேசிய கீதம் _____
அ) ஜன கண மன
ஆ) வந்தே மாதரம்
இ) அமர் சோனார் பாங்கலே
ஈ) நீராருங் கடலுடுத்த
3. ஆனந்தமடம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர்
அ) அக்பர்
ஆ) ரவீந்திரநாத் தாகூர்
இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி
ஈ) ஜவஹர்லால் நேரு
4. _____ பிறந்த நாளை சர்வதேச அகிம்சை நாளாக கொண்டாடுகிறோம்.
அ) மகாத்மா காந்தி
ஆ) சுபாஷ் சந்திர போஸ்
இ) சர்தார் வல்லபாய் பட்டேல்
ஈ) ஜவஹர்லால் நேரு
5. நம் தேசியக் கொடியில் உள்ள அசோக சக்கரத்தின் நிறம் _____
அ) வெளிர்நீலம்
ஆ) கருநீலம்
இ) நீலம்
ஈ) பச்சை
6. இந்திய விடுதலை நாளில் பறக்கவிடப்பட்ட முதல் தேசியக்கொடி _____ அருங்காட்சியத்தில் உள்ளது.
அ) சென்னை கோட்டை
ஆ) டெல்லி
இ) சாரநாத்
ஈ) கொல்கத்தா
7. தேசிய கீதத்தை இயற்றியவர் _____
அ) தேவேந்திரநாத் தாகூர்
ஆ) பாரதியார்
இ) ரவீந்திரநாத் தாகூர்
ஈ) பாலகங்காதர திலகர்
8. தேசியக்கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு _____
அ) 50 வினாடிகள்
ஆ) 52 நிமிடங்கள்
இ) 52 வினாடிகள்
ஈ) 20 வினாடிகள்
9. 1896 தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போது வந்தே மாதரம் பாடலை பாடியவர் ………….
அ) பங்கிம் சந்திர சட்டர்ஜி
ஆ) ரவீந்திரநாத் தாகூர்
இ) மகாத்மா காந்தி
ஈ) சரோஜினி நாயுடு
10. விடுதலை நாளின் போது டெல்லியில் கொடியேற்றுபவர்……
அ) பிரதம அமைச்சர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) துணைக்குடியரசுத் தலைவர்
ஈ) அரசியல் தலைவர் எவரேனும்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. இந்திய தேசிய இலச்சினை _____ உள்ள அசோகத் தூணிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.
2. இந்தியாவின் தேசியக் கனி _____
3. இந்தியாவின் தேசியப் பறவை _____
4. இந்தியாவில் தேசிய மரம் _____
5. 1947 விடுதலை நாளின் போது ஏற்றப்பட்ட கொடி _____ என்னுமிடத்தில் நெசவு செய்யப்பட்டது.
6. இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் _____
7. சக ஆண்டு முறையைத் துவக்கியவர் _____
8. இந்தியாவின் மிக நீளமான ஆறு _____
9. இந்திய நாணயத்தின் குறியீட்டை வடிவமைத்தவர் _____
10. தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரம் _____ ஆரங்களைக் கொண்டது.
விடைகள்
1. சாரநாத்
2. மாம்பழம்
3. மயில்
4. ஆலமரம்
5. குடியாத்தம்
6. பிங்காலி வெங்கையா
7. கனிஷ்கர்
8. கங்கை
9. டி. உதயகுமார்
10. 24
III. சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.
1. நான்முகச் சிங்கம் தற்போது _____ அருங்காட்சியகத்தில் உள்ளது. (கொல்கத்தா / சாரநாத்)
2. தேசிய கீதம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு _____ (1950 /1947)
3. _____ இந்தியாவின் தேசிய நுண்ணுயிரியாக அறிவிக்கப்பட்டுள்ளது. (லாக்டோ பேசில்லஸ்/ரைசோபியம்)
IV. நிரப்புக.
1. காவி – தைரியம்; வெள்ளை – _____
2. குதிரை – ஆற்றல்; காளை – _____
3. 1947 – விடுதலை நாள்; 1950 – _____
விடைகள்
1. நேர்மை
2. கடின உழைப்பு
3. குடியரசு நாள்
V. பொருந்தியுள்ளவற்றுள் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்
1. ரவீந்திரநாத் தாகூர் அ) தேசியப்பாடல்
2. பங்கிம் சந்திர சட்டர்ஜி ஆ) தேசியக்கொடி
3. பிங்காலி வெங்கையா இ) வான் இயற்பியலாளர்
4. மேக்னாத் சாகா ஈ) தேசியகீதம்
விடைகள்
1. ஈ) தேசியகீதம்
2. அ) தேசியப்பாடல்
3. ஆ) தேசியக்கொடி
4. இ) வான் இயற்பியலாளர்
VI. பொருத்தியபின் பொருந்தாதது எது?
1. தேசிய ஊர்வன அ) புலி
2. தேசிய நீர்வாழ் விலங்கு லாக்டோ ஆ) பேசில்லஸ்
3. தேசிய பாரம்பரிய விலங்கு இ) ராஜநாகம்
4. தேசிய நுண்ணுயிரி ஈ) டால்பின்
விடைகள்
1. இ) ராஜநாகம்
2. ஈ) டால்பின்
3. அ) புலி
4. ஆ) பேசில்லஸ்
VII. தவறான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்
1.
அ) தேசியக் கொடியின் நீள அகலம் 3:2 என்ற விகிதத்தில் உள்ளது.
ஆ) அசோகச் சக்கரம் 24 ஆரங்களைக் கொண்டது
இ) அசோகச் சக்கரம் வெளிர் நீல நிறமுடையது.
2.
அ) பிங்காலி வெங்கையா தேசியக் கொடியை வடிவமைத்தார்
ஆ) விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி தற்போது கொல்கத்தா அருங்காட்சியகத்தில் உள்ளது.
இ) விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி குடியாத்தத்தில் நெசவு செய்யப்பட்டது.
VIII. சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்.
1) ஆகஸ்டு 15 அன்று விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது.
2) நவம்பர் 26 அன்று குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது.
3) அக்டோபர் 12 அன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.