support@techeditz2utnpsc.com | 8300-921-521
மொழிமுதல், இறுதி எழுத்துகள்
Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 1 அறிவியல் தொழில்நுட்பம் “மொழிமுதல், இறுதி எழுத்துகள்”
I. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக:
அது 1921 ஆம் ஆண்டு. மத்திய தரைக் கடலில், ஒரு கப்பல் இங்கிலாந்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. தமிழர் ஒருவர் கப்பலின் மேல்தளத்தில் நின்று கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென அவரது உள்ளத்தில் கடல்நீர் ஏன் நீலநிறமாகக் காட்சியளிக்கிறது என்ற வினா எழுந்தது. அவ்வினா அவரை உறங்க விடவில்லை. இங்கிலாந்து பயணம் முடிந்து இந்தியா திரும்பினார். பிறகு பாதரச ஆவி விளக்கு, பென்சீன் மற்றும் நிறமாலைக் காட்டி ஆகியவற்றின் உதவியுடன் தமது ஆய்வைத் தொடங்கினார்.
ஆய்வின் முடிவில் 1928 பிப்ரவரி 28 ஆம் நாள் “இராமன் விளைவு” என்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்டார். இக்கண்டுபிடிப்பு இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. அவர் தமது கண்டுபிடிப்பை வெளியிட்ட பிப்ரவரி 28 ஆம் நாளை நாம் ஆண்டு தோறும் “தேசிய அறிவியல் நாள்” எனக் கொண்டாடி மகிழ்கிறோம். அவர் யார் தெரியுமா?அவர்தான் சர். சி. வி. இராமன்.
1. இராமன் விளைவைக் கண்டறிந்தவர் யார்?
2. இராமன் அவர்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்த கேள்வி எது?
அ) கடல்நீர் ஏன் கறுப்பாகக் காட்சியளிக்கிறது?
ஆ) கடல்நீர் ஏன் நீல நிறமாக இல்லை?
இ) கடல்நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது?
ஈ) கடல்நீர் ஏன் உப்பாக இருக்கிறது?
3. தேசிய அறிவியல் நாள் என்றைக்குக் கொண்டாடப்படுகிறது? ஏன்?
4. இப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பிடுக.
விடைகள்:
1. சர். சி. வி. இராமன்
2. கடல்நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது?
3. “இராமன் விளைவு” கண்டுபிடிப்பை வெளியிட்ட பிப்ரவரி 28 ஆம் நாளை நாம் ஆண்டு தோறும் “தேசிய அறிவியல் நாள்” எனக் கொண்டாடி மகிழ்கிறோம்
4. தேசிய அறிவியல் நாள்
II. பின்வரும் தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக:
1. கம்ப்யூட்டர் துறையில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
2. காலிங்பெல்லை அழுத்தினான் கணியன்.
3. மனிதர்கள் தங்கள் வேலைகளை எளிதாக்க மிஷின் களைக் கண்டுபிடித்தனர்.
4. இன்று பல்வேறு துறைகளிலும் ரோபோ பயன்பாட்டிற்கு வந்துள்ளது
விடைகள்:
1. கணினி
2. அழைப்பு மணி
3. எந்திரம்
4. அடிமை
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here
Visit & Join In Our Telegram Group: Click Here