support@techeditz2utnpsc.com | 8300-921-521
பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்
Samacheer Book Back Questions And Answers For வரலாறு Standard 6 Term 3 “பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்”
I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
1. குப்த வம்சத்தை நிறுவியவர் _____ ஆவார்.
அ) முதலாம் சந்திரகுப்தர்
ஆ) ஸ்ரீகுப்தர்
இ) விஷ்ணு கோபர்
ஈ) விஷ்ணுகுப்தர்
2. பிரயாகை மெய்கீர்த்தியை இயற்றியவர் _____ ஆவார்.
அ) காளிதாசர்
ஆ) அமரசிம்மர்
இ) ஹரிசேனர்
ஈ) தன்வந்திரி
3. சந்திரகுப்தரால் நிறுவப்பட்ட ஒற்றை இரும்புத் தூண் _____ என்ற இடத்தில் உள்ளது.
அ) மெக்ராலி
ஆ) பிதாரி
இ) கத்வா
ஈ) மதுரா
4. அறுவைச் சிகிச்சைச் செயல்முறை குறித்து விளக்கிய முதல் இந்தியர் _____.
அ) சரகர்
ஆ) சுஸ்ருதர்
இ) தன்வந்திரி
ஈ) அக்னிவாசர்
விடை:
ஆ) சுஸ்ருதர்
5. வங்காளத்தின் கௌட அரசர் _____.
அ) சசாங்கர்
ஆ) மைத்திரகர்
இ) ராஜ வர்த்தனர்
ஈ) இரண்டாம் புலிகேசி
II. கூற்றைக் காரணத்துடன் பொருத்திப் பார்த்து சரியான விடையைக் கண்டுபிடிக்கவும்:
1. கூற்று: வட இந்தியாவில் பல சிறிய நாடுகளைக் கைப்பற்றிய பின்னர், முதலாம் சந்திரகுப்தர் ஒரு பெரிய நாட்டின் முடியரசராகத் தனக்குத்தானே முடி சூட்டிக் கொண்டார்.
காரணம்: முதலாம் சந்திரகுப்தர் லிச்சாவி குடும்பத்தைச் சேர்ந்த குமாரதேவியை மணமுடித்தார்.
அ. காரணமும் கூற்றும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே
ஆ. காரணமும் கூற்றும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ. கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
ஈ. கூற்று தவறு, ஆனால் காரணம் சரி.
2. கூற்று 1: தென்னிந்திய அரசர்களோடு இரண்டாம் சந்திரகுப்தர் சுமுகமான உறவைக் கொண்டிருக்கவில்லை.
கூற்று 2: குப்தர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினைப் பின்பற்றினர்.
அ) முதலாம் கூற்று தவறு, ஆனால் இரண்டாம் கூற்று சரி.
ஆ) இரண்டாம் கூற்று தவறு, ஆனால் முதல் கூற்று சரி.
இ) இரண்டு கூற்றுகளும் சரி
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு
3. கீழ்க்கான்பனவற்றில் கால வரிசைப்படி அமைந்துள்ளது எது?
அ) ஸ்ரீ குப்தர் – முதலாம் சந்திரகுப்தர் – சமுத்திரகுப்தர் – விக்கிரமாதித்யர்
ஆ) முதலாம் சந்திரகுப்தர் – விக்கிரமாதித்யர் – ஸ்ரீகுப்தர் – சமுத்திரகுப்தர்
இ) ஸ்ரீகுப்தர் – சமுத்திரகுப்தர் – விக்கிரமாதித்யர் – முதலாம் சந்திரகுப்தர்
ஈ) விக்கிரமாதித்யர் – ஸ்ரீகுப்தர் – சமுத்திர குப்தர் – முதலாம் சந்திரகுப்தர்
4. 3. கீழ்க்காணும் கூற்றுகளைச் சிந்திக்கவும். அவற்றில் எது/ எவை சரியானது/சரியானவை என்பதைக் கண்டறியவும்.
i. அதிக வட்டிக்குப் பணத்தைக் கடன் வழங்கும் முறை பழக்கத்தில் இருந்தது.
ii. மட்பாண்டம் செய்தலும் சுரங்கம் தோண்டுவதும் செழித்தோங்கிய தொழில்களாக இருந்தன.
அ) i மட்டும் சரி
ஆ) ii மட்டும் சரி
இ) i மற்றும் ii ஆகிய இரண்டுமே சரி
ஈ) i மற்றும் ii ஆகிய இரண்டுமே தவறு
5.பொருந்தாததை வட்டமிடுக.
i. காளிதாசர், ஹரிசேனர், சமுத்திரகுப்தர், சரகர்
ii. ரத்னாவளி, ஹர்சரிதா, நாகநந்தா, பிரியதர்சிகா
III. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. இலங்கை அரசர் _____ சமுத்திரகுப்தரின், சமகாலத்தவர் ஆவார்.
2. இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சியின் போது சீனாவைச் சேர்ந்த பௌத்தத் துறவி _____ இந்தியாவிற்கு வந்தார்.
3. _____ படையெடுப்பு குப்தர்களின் வீழ்ச்சிக்கு வழிகோலியது.
4. _____ அரசாங்கத்தின் முக்கிய வருவாயாக இருந்தது.
5. குப்தர்களின் அலுவலக மொழி _____.
6. பல்லவ அரசர் _____ சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்டார்.
7. வர்த்த ன அரச வம்சத்தின் புகழ்பெற்ற அரசர் _____ஆவார்.
8. ஹர்ஷர் தலைநகரை _____ லிருந்து கன்னோசிக்கு மாற்றினார்.
விடைகள்:
1. ஸ்ரீமேகவர்மன்
2. பாகியான்
3. ஹூணர்கள்
4. நிலவரி
5. சமஸ்கிருதம்
6. விஷ்ணுகோபன்
7. ஹர்ஷவர்த்தனர்
8. தானேஷ்வரி
IV. சரியா/தவறா என எழுதுக:
1. தன்வந்திரி மருத்துவத்துறையில் ஒரு புகழ்பெற்ற அறிஞராக திகழ்ந்தார்.
2. குப்தர்களின் காலத்தில் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்கள் இந்தோ – ஆரிய பாணியை ஒத்துள்ளன.
3. குப்தர்களின் ஆட்சிக்காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் இல்லை.
4. ஹர்ஷர் ஹீனயான பௌத்த பிரிவைச் சேர்ந்தவர்
5. ஹர்ஷர் அவருடைய மத சகிப்புத் தன்மையின்மைக்காகப் பெயர் பெற்றவர்.
விடைகள்:
1. சரி
2. தவறு
3. சரி
4. தவறு
5. தவறு
V. பொருத்துக:
(i)
1. மிகிரகுலா அ. வானியல்
2. ஆரியபட்டர் ஆ. குமாரகுப்தர்
3. ஓவியம் இ. ஸ்கந்தகுப்தர்
4. நாளந்தா பல்கலைக்கழகம் ஈ. இடம் விட்டு இடம் செல்லும் வணிகர்கள்
5. சார்த்தவாகர்கள் உ. பாக்
விடைகள்:
1. இ
2. அ
3. உ
4. ஆ
5. ஈ
(ii)
1. பாணர் அ. 10,000 மாணவர்கள்
2. ஹர்ஷர் ஆ. பிரயாகை
3. நாளந்தா பல்கலைக்கழகம் இ. ஹர்ஷ சரிதம்
4. யுவான் சுவாங் ஈ. ரத்னாவளி
5. பெளத்த சபை உ. சி-யூ-கி
விடைகள்:
1 – இ
2 – ஈ
3 – அ
4 – உ
5 – ஆ
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here