பெண்கள் மேம்பாடு

Samacheer Book Back Questions And Answers For இந்திய அரசியலமைப்பு Standard 7 Term 3 “பெண்கள் மேம்பாடு”

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. பின்வருவனவற்றில் எது பாலின சமத்துவமின்மை அல்ல?
அ) மோசமான பேறுகால ஆரோக்கியம்
ஆ) ஆண்களுக்கு அதிக பாதுகாப்பற்ற தன்மை
இ) எச்.ஐ.வி / எய்ட்ஸ் பரவுதல்
ஈ) பெண்களின் குறைந்த எழுத்தறிவு விகிதம்

2. பாலின சமத்துவம் என்பது எது தொடர்புடைய பிரச்சனை
அ) பெண் குழந்தைகள்; பெண்களின் பிரச்சனை
ஆ) அனைத்து சமூகத்திலும் பெண்களும் ஆண்களும் சமம்
இ) மூன்றாம் உலக நாடுகள் மட்டும்
ஈ) வளர்ந்த நாடுகள் மட்டும்

3. பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேம்பட பின்வரும் எந்த உத்திகள் உதவுகின்றது?
அ) பாகுபாடுகளுக்கு எதிரான சவால்களுக்கு பெண்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.
ஆ) பெண்களுக்கான அதிகமான வருமான ஆதாரங்கள்
இ) மேம்பட்ட கல்விக்கான அணுகுமுறை
ஈ) மேலே உள்ள அனைத்தும்

4. வளரும் நாடுகளில் சிறுவர்களை விட பெண் குழந்தைகள் இடைநிலைக் கல்வியை தவறவிடுவது ஏன்?
அ) பள்ளிக் கல்வி கட்டணம் உயர்வு காரணமாக, சிறுவர்கள் மட்டும் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள்
ஆ) பெண் குழந்தைகள் வீட்டுவேலை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது
இ) குழந்தைத் திருமணம் அவர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகிறது
ஈ) மேலே உள்ள அனைத்தும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. இந்தியாவில் பெண்கள் கல்வியை செயல்வடிவாக்கிய ஜோதிராவ் புலே நினைவில் வைக்கப்படுகிறார் அவர், தனது மனைவியுடன் _____ 1848 இல் சிறுமிகளுக்கான முதல் பள்ளியைத் தொடங்கினார்
2. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி வகித்த முதல் பெண்
3. முதல் பெண் காவல்துறை இயக்குநர் (DGP) _____ ஆவார்.
4. புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய பெண் _____

விடைகள்:
1. சாவித்ரிபாய் புலே
2. சுஷ்மா ஸ்வராஜ்
3. காஞ்சன் சௌத்ரி பட்டாச்சாரியா
4. அருந்ததி ராய்

ADVERTISEMENT

III. பொருத்துக:
1. சிரிமாவோ பண்டாரநாயக              அ) இங்கிலாந்து
2. வாலென்டினா தெரோஷ்கோவா    ஆ) ஜப்பான்
3. ஜன்கோ தபே                                          இ) இலங்கை
4. சார்லோட் கூப்பர்                                   ஈ) சோவியத் ஒன்றியம்

விடைகள்:
1. இ) இலங்கை
2. ஈ) சோவியத் ஒன்றியம்
3. ஆ) ஜப்பான்
4. அ) இங்கிலாந்து

IV. பின்வரும் அறிக்கைகளை ஆராய்க:
1. பொருத்தமான பதிலைத் தேர்வு செய்க
கூற்று (கூ): இப்போது அனைத்து மனிதாபிமான நடவடிக்கைகள் அனைத்திலும் பெண்கள் ஒருங்கிணைகிறார்கள்.
காரணம் (கா): சமூகத்தின் அனைத்து மோதல்களிலும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள்.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரி

2. கூற்று (கூ): பெண்களுக்கு எதிரான வன்முறை சாதி, மதம், வர்க்கம், வயது மற்றும் கல்வியை கடந்து நடைபெறுகிறது.
காரணம் (கா): வீட்டு வன்முறைகள், கருக்கலைப்பு, பெண் சிசுக் கொலை, வரதட்சணை கொலை, திருமணம் மூலம் கொடுமை, சிறுவருக்கு நிகழும் கொடுமைகள் என வெளிப்படுகிறது
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரி


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?