support@techeditz2utnpsc.com | 8300-921-521
தென்னிந்திய அரசுகள்
Samacheer Book Back Questions And Answers For வரலாறு Standard 6 Term 3 “தென்னிந்திய அரசுகள்”
I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
1. கீழ்க்காண்பவர்களில் வைகுண்டப்பெருமாள் கோவிலைக் கட்டியது யார்?
அ) இரண்டாம் நரசிம்மவர்மன்
ஆ) இரண்டாம் நந்திவர்மன்
இ) தந்திவர்மன்
ஈ) பரமேஸ்வரவர்மன்
2. கீழ்க்காண்பனவற்றுள் முதலாம் மகேந்திரவர்மன் சூட்டிக் கொண்ட பட்டங்கள் யாவை?
அ) மத்தவிலாசன்
ஆ) விசித்திரசித்தன்
இ) குணபாரன்
ஈ) இவை மூன்றும்
3. கீழ்க்காண்பனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு எது?
அ) அய்கோல்
ஆ) சாரநாத்
இ) சாஞ்சி
ஈ) ஜூனாகத்
II. கீழ்க்காணும் கூற்றுகளை வாசித்துப் பொருத்தமான விடையை மக் செய்யவும்:
1. கூற்று (i): பாறை குடைவரை கோவிலைச் செதுக்கும் முறையிலிருந்து, கற்களைக் கொண்டு கட்டுமானக் கோவில்களைக் கட்டும் மாற்றம் ஏற்பட்டதை பல்லவர் கலை உணர்த்துகிறது.
கூற்று (ii): காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோவில் பல்லவர்களின் கலை மற்றும் கட்டடக்கலைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.
அ. கூற்று i தவறு
ஆ) கூற்று ii தவறு
இ. இரு கூற்றுகளும் சரி
ஈ) இரு கூற்றுகளும் தவறு
2. பல்லவ அரசினைப் பற்றிய கூற்றுக்களைச் சிந்திக்கவும்
கூற்று (i): இவர்களுடைய ஆட்சியில் அப்பரால் இயற்றப்பட்ட தேவாரம் முதல் மற்ற தமிழ் இலக்கியங்களும் செழித்தோங்கின.
கூற்று (ii): முதலாம் மகேந்திரவர்மன் மத்த விலாச பிரகசனம் எனும் நூலின் ஆசிரியர் ஆவார்
அ: கூற்று i மட்டும் சரி
ஆ) கூற்று ii மட்டும் சரி
இ. இரு கூற்றுகளும் சரி
ஈ) இரு கூற்றுகளும் தவறு
3. ராஷ்டிரகூட வம்சம் குறித்த கீழ்க்காணும் கூற்றுக்களைச் சிந்தித்து அவற்றில் எவை சரியா ன கூற்றென்று கண்டறியவும்
i. இவ்வம்சத்தை நிறுவியர் தந்திதுர்கா
ii. அமோகவர்ஷர் கவிராஜமார்க்கத்தை எழுதினார்.
iii. முதலாம் கிருஷ்ணர் எல்லோராவில் கைலாசநாதர் கோவிலைக் கட்டினார்.
அ) i மட்டும் சரி
ஆ) ii,iii சரி
இ) i,iii சரி
ஈ) மூன்றும் சரி
4.கீழ்க்காண்பனவற்றில் எது சரியான இணையில்லை
அ) எல்லோரா குகைகள் – ராஷ்டிரகூடர்கள்
ஆ) மாமல்லபுரம் – முதலாம் நரசிம்மவர்மன்
இ) எலிபெண்டா குகைகள் – அசோகர்
ஈ) பட்டடக்கல் – சாளுக்கியர்கள்
5. தவறான இணையைக் கண்டறியவும்
அ) தந்தின் – தசகுமார சரிதம்
ஆ) வாத்ஸ்யாயர் – பாரத வெண்பா
இ) பாரவி – கிரதார்ஜூனியம்
ஈ) அமோகவர்ஷர் – கவிராஜமார்க்கம்
III. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. _____ ஹர்ஷவர்த்தனரை நர்மதை ஆற்றின் கரையில் தோற்கடித்தார்.
2. _____ வாதாபியை அழித்து வாதாபி கொண்டான் எனப் பட்டம் சூட்டிக்கொண்டார்
3. அய்கோல் கல்வெட்டின் ஆசிரியர் _____ ஆவார்
4. _____ முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதியாவார்
5. _____ ஆகிய இடங்களில் உள்ள இசைக் கல்வெட்டுக்கள் பல்லவர்களின் இசையார்வத்தை உணர்த்துகின்றன.
விடைகள்:
1. இரண்டாம் புலிகேசி
2. முதலாம் நரசிம்மவர்மன்
3. ரவி கீர்த்தி
4. பரஞ்சோதி
5. குடுமியான்மலை, திருமயம்
IV. பொருத்துக:
1. பல்லவர் அ. கல்யாணி
2. கீழைச் சாளுக்கியர் ஆ. மான்யகேட்டா
3. மேலைச் சாளுக்கியர் இ. காஞ்சி
4. ராஷ்டிரகூடர் ஈ. வெங்கி
விடைகள்:
1. இ
2. ஈ
3. அ
4. ஆ
V. சரியா /தவறா என எழுதுக:
1. புகழ்பெற்ற இசைக்கலைஞர் ருத்ராச்சாரியார் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் வாழ்ந்தவர்
2. ராஷ்டிரகூட வம்சத்தின் தலைசிறந்த அரசர் இரண்டாம் புலிகேசி
3. மாமல்லபுரம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகும்
4. தேவாரம் ஆழ்வார்களால் இயற்றப்பட்டது
5. விருப்பாஷி கோவில் காஞ்சி கைலாசநாதர் கோவிலை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.
விடைகள்:
1. சரி
2. தவறு
3. சரி
4. தவறு
5. சரி
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here