support@techeditz2utnpsc.com | 8300-921-521
தமிழ் எழுத்துகளின் வகை தொகை
Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 1 தமிழ்த்தேன் “தமிழ் எழுத்துகளின் வகை தொகை”
I. கொடுக்கப்பட்டுள்ள மாத்திரை அளவுக்கேற்பச் சொற்களை எழுதுக:
1. உயிரெழுத்தில் தொடங்கும் இரண்டு மாத்திரை அளவுள்ள சொல்
2. இரண்டு மாத்திரை அளவுள்ள ஓரெழுத்துச் சொல்
3. ஆய்த எழுத்து இடம்பெறும் இரண்டரை மாத்திரை அளவுள்ள சொல்
விடைகள்:
1. அது
2. தீ
3. அஃது
II. கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக:
விரிவான கருத்தைச் சுருக்கிச் சொல்வதே பழமொழியின் சிறப்பு. சான்றாக, சுத்தம் சோறு போடும் என்னும் பழமொழி தரும் பொருளைக் காண்போம். சுத்தம் நோயற்ற வாழ்வைத் தரும். உடல் ஆரோக்கியமே உழைப்புக்கு அடிப்படை. உழைத்துத் தேடிய பொருளால் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைப் பெறுகிறோம். இவை அனைத்திற்கும் சுத்தமே அடிப்படை. இவ்விரிந்த கருத்து சிறு அடிக்குள் அடங்கியுள்ளது.
1. பழமொழியின் சிறப்பு _____ சொல்வது
அ) விரிவாகச்
ஆ) சுருங்கச்
இ) பழமையைச்
ஈ) பல மொழிகளில்
2. நோயற்ற வாழ்வைத் தருவது _____
3. உடல் ஆரோக்கியமே _____ அடிப்படை.
4. உழைத்துத் தேடிய பொருளால் நாம் பெறுவன யாவை?
5. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக.
விடைகள்:
1. சுருங்கச்
2. சுத்தம்
3. உழைப்புக்கு
4. உணவு, உடை, உறைவிடம்
5. சுத்தம்
III. பிறமொழிக் கலப்பின்றிப் பேசுக:
1. எங்க ஸ்கூல்லே சுற்றுலா கூட்டிட்டுப் போறாங்க.
2. பெற்றோரிடம் பர்மிசன் லெட்டர் வாங்கி வரச் சொன்னார்கள்.
விடைகள்:
1. எங்கள் பள்ளியில் சுற்றுலா கூட்டிட்டுப் போறாங்க.
2. பெற்றோரிடம் அனுமதி கடிதம் வாங்கி வரச் சொன்னார்கள்.
IV. பொருத்தமான சொற்களைக் கொண்டு தொடர்களை நிரப்புக:
அழகு, ஏற்றம், இன்பம், ஊக்கம், இனிமை, ஆற்றல், ஈடு, இசை, உணர்வு, ஏடுகள், உரிமை, என்றும், எளிதாய், உவகை, அன்பு
அ – _____ தருவது தமிழ்
ஆ – _____ தருவது தமிழ்
இ – _____ தருவது தமிழ்
ஈ – _____ இல்லாதது தமிழ்
உ – _____ தருவது தமிழ்
ஊ – _____ தருவது தமிழ்
எ – _____ வேண்டும் தமிழ்
ஏ – _____ தருவது தமிழ்
விடைகள்:
அன்பு தருவது தமிழ்
ஆற்றல் தருவது தமிழ்
இன்பம் தருவது தமிழ்
ஈடு இல்லாதது தமிழ்
உவகை தருவது தமிழ்
ஊக்கம் தருவது தமிழ்
என்றும் வேண்டும் தமிழ்
ஏற்றம் தருவது தமிழ்
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here
Visit & Join In Our Telegram Group: Click Here