support@techeditz2utnpsc.com | 8300-921-521
தமிழ்க்கும்மி
Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 1 தமிழ்த்தேன் “தமிழ்க்கும்மி”
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. தாய் மொழியில் படித்தால் _____ அடையலாம்
அ) பன்மை
ஆ) மேன்மை
இ) பொறுமை
ஈ) சிறுமை
2. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் _____ சுருங்கிவிட்டது
அ) மேதினி
ஆ) நிலா
இ) வானம்
ஈ) காற்று
3. ‘செந்தமிழ்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) செந் + தமிழ்
ஆ) செம் + தமிழ்
இ) சென்மை + தமிழ்
ஈ) செம்மை + தமிழ்
4. ‘பொய்யகற்றும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) பொய் + அகற்றும்
ஆ) பொய் + கற்றும்
இ) பொய்ய + கற்றும்
ஈ) பொய் + யகற்றும்
5. பாட்டு+ இருக்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _____.
அ) பாட்டிருக்கும்
ஆ) பாட்டுருக்கும்
இ) பாடிருக்கும்
ஈ) பாடியிருக்கும்
6. எட்டு + திசை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _____.
அ) எட்டுத்திசை
ஆ) எட்டிதிசை
இ) எட்டுதிசை
ஈ) எட்டிஇசை
II. பாடல் அடிகளில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சொற்களை எடுத்து எழுதுக:
விடைகள்:
- கொட்டுங்கடி – கோதையரே
- எட்டுத்திசை – எட்டிடவே
- ஊழி – ஊற்று
- ஆழிப் – அழியாமல்
- பொய் – பூண்டவரின்
- மெய்புகட்டும் – மேதினி
- அறிவு – அழியாமலே
- மெய் – மேதினி
III. பாடல் அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் (எதுகை) சொற்களை எடுத்து எழுதுக:
விடைகள்:
- கொட்டுங்கடி – எட்டுத்திசை
- ஊழி – ஆழி
- பொய் – மெய்
- எட்டுங்கடி – எட்டிடவே
- ஆழி – அழியாமலே
- கண்டதுவாம் – கொண்டதுவாம்
- பூட்டறுக்கும் – பாட்டிருக்கும்
IV. பாடல் அடிகளில் இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக:
விடைகள்:
- கொட்டுங்கடி – கொட்டுங்கடி
- கொண்டதுவாம் – நின்றதுவாம்
- பாட்டிருக்கும் – காட்டிருக்கும்
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here
Visit & Join In Our Telegram Group: Click Here