support@techeditz2utnpsc.com | 8300-921-521
டெல்லி சுல்தானியம்
Samacheer Book Back Questions And Answers For வரலாறு Standard 7 Term 1 “டெல்லி சுல்தானியம்”
I. சரியான விடையைத் தேர்வு செய்க:
1. _____ மாம்லுக் அரச வம்சத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
அ) முகமதுகோரி
ஆ) ஜலாலுதீன்
இ) குத்புதீன் ஐபக்
ஈ) இல்துமிஷ்
2. குத்புதீன் தனது தலைநகரை ___________ லிருந்து டெல்லிக்கு மாற்றினார்.
அ) லாகூர்
ஆ) புனே
இ) தௌலதாபாத்
ஈ) ஆக்ரா
3. _____ குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தார்.
அ) ரஸ்ஸியா
ஆ) குத்புதீன் ஐபக்
இ) இல்துமிஷ்
ஈ) பால்பன்
4. டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் நகருக்கான அடிக்கல்லை நாட்டியவர் _____ ஆவார்.
அ) முகமது பின் துக்ளக்
ஆ) பிரோஷ் ஷா துக்ளக்
இ) ஜலாலுதீன்
ஈ) கியாசுதீன்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. துக்ளக் அரசவம்சத்தைத் தோற்றுவித்தவர் _____ ஆவார்
2. முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து _____க்கு மாற்றினார்.
3. புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் அமிர் குஸ்ருவை _____ ஆதரித்தார்.
4. டெல்லியிலுள்ள குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதியை _____ கட்டினார்.
5. இந்தியாவிற்கு செங்கிஸ்கான் தலைமையிலான மங்கோலியரின் அச்சுறுத்தல் _____ ஆட்சியின் போது ஏற்பட்டது.
விடைகள்:
1. கியாசுதீன் துக்ளக்
2. தேவகிரி
3. பால்பன்
4. குத்புதீன் ஐபக்
5. இல்துமிஷ்
III. பொருத்துக:
1. துக்ரில்கான் அ. காராவின் ஆளுநர்
2. அலாவுதீன் ஆ. ஜலாலுதீன் யாகுத்
3. பகலூல் லோடி இ. வங்காள ஆளுநர்
4. ரஸ்ஸியா ஈ. சிர்கந்தின் ஆளுநர்
விடைகள்:
1. இ
2. அ
3. ஈ
4. ஆ
IV. சரியா, தவறா?
1. குத்புதீன் இனங்காண முடியாத காய்ச்சலால் மரணமடைந்தார்
2. ரஸ்ஸியா திறமை மிக்க, மனவலிமை கொண்ட போர்வீரர்.
3. ஐபக்கின் மறைவுக்குப் பின்னர் அவருடைய மகன் இல்துமிஷைத் துருக்கியப் பிரபுக்கள் சுல்தானாகத் தேர்வு செய்தனர்.
4. தக்காண விசயங்களில் தலையிடக்கோரி பாமினி இளவரசர் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்ள பிரோஷ்ஷா மறுத்துவிட்டார்.
விடைகள்:
1. தவறு
2. சரி
3. தவறு
4. சரி
V. சரியான விடையை (✓) டிக் செய்யவும். கூற்றைக் காரணத்தோடு ஒப்பிடுக:
அ) கூற்று: மங்கோலியருடன் பால்பன் சுமூகமான உறவை மேற்கொண்டார்.
காரணம்: செங்கிஸ்கானின் பேரனான மங்கோலிய அரசன், சட்லஜ் நதியைக் கடந்து மங்கோலியர் படையெடுத்து வரமாட்டார்கள், என உறுதி கூறியிருந்தார்.
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே.
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) காரணமும் கூற்றும் தவறானவை.
ஈ) கூற்று தவறு காரணம் சரி.
ஆ) சரியான இணையைத் தேர்வு செய்க.
1. ஹொய்சாளர் – தேவகிரி
2. யாதவர் – துவாரசமுத்திரம்
3. காகதியர் – வாராங்கல்
4. பல்லவர் – மதுரை
இ) தவறான கூற்றினை / கூற்றுகளைக் கண்டறியவும்
1. 1206இல் கோரி முகமதுவின் மரணத்திற்குப் பின்னர், அவருடைய அடிமையான குத்புதீன் ஐபக், இந்தியாவிலிருந்த துருக்கியப் பகுதிகளுக்குத் தன்னை அரசனாக அறிவித்துக்கொண்டார்
2. ரஸ்ஸியா, தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரைப் பற்றியும் இடையூறு ஏற்படுத்துவோர் பற்றியும் செய்திகள் சேகரிக்க ஒற்றர்கள் துறையொன்றை நிறுவினார்
3. மங்கோலியரின் தாக்குதலிலிருந்து தனது நாட்டைப் பாதுகாக்கப் பால்பன் கோட்டைகளைக் கட்டினார்
4. இப்ராகிம் லோடி 1526இல் பாபரால் தோற்கடிக்கப்பட்டார்.
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here