support@techeditz2utnpsc.com | 8300-921-521
ஊடகமும் ஜனநாயகமும்
Samacheer Book Back Questions And Answers For இந்திய அரசியலமைப்பு Standard 7 Term 2 “ஊடகமும் ஜனநாயகமும்”
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
1. கீழ்க்கண்டவற்றில் அச்சு ஊடகத்தின் கீழ் வருவது எது?
அ) வானொலி
ஆ) தொலைக்காட்சி
இ) செய்தித்தாள்
ஈ) இணையதளம்
2. கீழ்க்கண்டவற்றில் ஒலிபரப்பு ஊடகம் என்பது _____
அ) இதழ்க ள்
ஆ) அறிக்கைகள்
இ) நாளிதழ்கள்
ஈ) வானொலி
3. உலகினை மக்களின் அருகாமையில் கொண்டு வந்த ஊடகம் _____
அ) தட்டச்சு
ஆ) தொலைக்காட்சி
இ) தொலைப்பேசி
ஈ) இவற்றில் எதுவும் இல்லை
4. வெகுஜன ஊடகம் என்பது_____
அ) தட்டச்சு
ஆ) தொலைக்காட்சி
இ) அ மற்றும் ஆ
ஈ) இவற்றில் எதுவுமில்லை
5. ஊடகம் ஏன் சுதந்திரமாக செயல்பட வேண்டும்
அ) நிறைய பணம் ஈட்ட
ஆ) நிறுவனத்தை ஊக்கப்படுத்த
இ) நடுநிலையான தகவலை தருவதற்கு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. உலகத்தினை சிறியதாகவும், மிக அருகாமையிலும் கொண்டு வந்தது _____
2. ஒவ்வொரு தனிமனிதனும் _____ ஆகும்
3. அச்சு இயந்திரம் _____ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது
4. நமது வாழ்க்கையை தீர்மானிக்கும் மதிப்பீடுகளின் தொகுப்பு _____ ஆகும்.
5. இந்திய அரசின் வானொலி ஒலிபரப்பு நிறுவனம் _____.
விடைகள்:
1. ஊடகம்
2. ஊடகத்தின் வெளிப்பாடு
3. ஜோஹன்னஸ் குட்டன்பெர்க்
4. நெறிமுறை
5. ஆகாசவானி
III. பொருத்துக:
1. குறு அளவிலான ஊடகம் அ) கூகுள் இணையம்
2. சமூக ஊடகம் ஆ) சுவரொட்டிகள்
3. அச்சு ஊடகம் இ) கருத்தரங்கு
4. இணைய ஊடகம் ஈ) திரைப்படங்கள்
5. ஒலிபரப்பு ஊடகம் உ) முகநூல்
விடைகள்:
1. இ) கருத்தரங்கு
2. உ) முகநூல்
3. ஆ) சுவரொட்டிகள்
4. அ) கூகுள் இணையம்
5. ஈ) திரைப்படங்கள்
IV. கீழ்க்காணும் வாக்கிங்களில் சரியானவற்றை (✓) டிக் செய்யவும்:
1. கூற்று: அச்சு ஊடகம் மக்களின் பல்கலைக்கழகம் என கருதப்படுகிறது.
காரணம்: பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குவதிலும், கல்வியறிவு ஊட்டுவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது மற்றும் பொதுமக்களின் பாதுகாவலனாகவும் செயல்படுகிறது.
அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
2. தவறான ஒன்றை கண்டுபிடிக்க
அ) செய்தித்தாள்கள்
ஆ) நாளிதழ்கள்
இ) அறிக்கைகள்
ஈ) கீச்சகம்
உ) சுவராட்டிகள்
3. கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்
அ) ஊடகம் என்பது பொதுவாக ஒருவருக்கொருவர் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் சாதனம் ஆகும்
ஆ) ஊடகம் மிகவும் சக்திவாய்ந்த நிறுவனமாகும்
இ) ஊடகம் மக்களிடம் பொது கருத்தை உருவாக்குவதில் முக்கிய பங்குவகிக்கிறது
ஈ) ஊடகத்திற்கு எந்த பொறுப்பும் கிடையாது
i) அ, ஆ மற்றும் இ சரி
ii) அ, ஆ மற்றும் ஈ சரி
iii) ஆ, இ மற்றும் சரி
iv) அ, ஆ மற்றும் ஈ சரி