இன எழுத்துகள்

Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 2 கல்வி – கண்ணெனத் தகும் “இன எழுத்துகள்”

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. மெல்லினத்திற்காக இன எழுத்து இடம்பெறாத நூல் எது?
அ) மஞ்சள்
ஆ) வந்தான்
இ) கல்வி
ஈ) தம்பி

2. தவறான சொல்லை கண்டறிக.
அ) கண்டான்
ஆ) வென்ரான்
இ) நண்டு
ஈ) வண்டு

II. பின்வரும் சொற்களைத் திருத்தி எழுதுக:
பிழையான சொல்
1. தெண்றல்
2. கன்டம்
3. நன்ரி
4. மன்டபம்

விடைகள்: (திருத்தம்)
1. தென்றல்
2. கண்டம்
3. நன்றி
4. மண்டபம்

III. தலைவர்களின் பிறந்த நாள் எந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது?
(குழந்தைகள் தினம், மாணவர் தினம், ஆசிரியர் தினம், தேசிய இளைஞர் தினம், கல்விவளர்ச்சி நாள்)
1. காமராஜர் பிறந்த நாள் _____.
2. டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் _____.
3. அப்துல்கலாம் பிறந்த நாள் _____.
4. விவேகானந்தர் பிறந்த நாள் _____.
5. ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் _____.

விடைகள்:
1. கல்வி வளர்ச்சி நாள்.
2. ஆசிரியர் தினம்.
3. மாணவர் தினம்.
4. தேசிய இளைஞர் தினம்.
5. குழந்தைகள் தினம்

ADVERTISEMENT

IV. இன எழுத்துக்கள் அமைந்துள்ள சொற்களை கண்டறிக:
1. கங்கை, பக்கம், வண்டு, மண்டபம், மங்கை
2. வெந்தயம், தந்தம், பஞ்சு, பச்சை, தக்காளி, மஞ்சள்
3. கம்பளம், குன்று, காக்கை, செங்கடல், தேங்காய்

விடைகள்:
1. கங்கை, பக்கம், வண்டு, மண்டபம், மங்கை
2. வெந்தயம், தந்தம், பஞ்சு, பச்சை, தக்காளி, மஞ்சள்
3. கம்பளம், குன்று, காக்கை, செங்கடல், தேங்காய்

V. சொற்களுள் அமைந்துள்ள இன எழுத்துக்களை எடுத்து எழுதுங்கள்:
சங்கு, நுங்கு, பிஞ்சு, வஞ்சகம், பட்டணம், சுண்டல், வண்டி, பந்தயம், பந்து, கற்கண்டு, தென்றல், நன்று

விடைகள்:
1. சங்கு – ங்கு
2. நுங்கு – ங்கு
3. பிஞ்சு – ஞ்சு
4. வஞ்சம் – ஞ்ச
5. பட்டணம் – ட்ட
6. சுண்டல் – ண்ட
7. வண்டி – ண்டி
8. பந்தயம் – ந்த
9. பந்து – ந்து
10. கற்கண்டு – ண்டு
11. தென்றல் – ன்ற
12. நன்று – ன்று

VI. பின்வரும் பத்தியைப் படித்து வினாவிற்கேற்ற விடையளிக்கவும்:
காமராசரின் வீட்டுக்ள் ஒரு சிறுவனும் அவனுடைய தங்கையும் நுழைய முயன்றனர். ஊழியர் அவர்களை தடுப்பதை காமராசர் கவனித்தார். உடனே அவர்களை உள்ளே அழைத்தார். “யாரைப் பார்க்க வந்தீங்க?” என்று அன்புடன் வினவினார். ”எங்க அண்ணனுக்கு தேர்வுக்கு பணம் கட்ட அம்மாவிடம் வசதியில்லே. உங்களைப் பார்த்தால்,,,,” என்று சிறுமி கூறி முடிப்பதற்குள் “அம்மா அனுப்பி விட்டாரா?” என்று காமராசர் கேட்டார். “இல்லை நாங்களாகத்தான் வந்தோம். அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாக கொண்டு போய் வித்துட்டு வருவாங்க. அதில் வரும் வருமானத்தை வச்சுதான் எங்களை படிக்க வைக்கிறாங்க” என்று குழந்தைகள் கூறினர். அதனைக் கேட்டதும் மாடியேறிச் சென்று பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தார்.

மறுநாள் குழந்தைகள் இருவரும் காமராசரைத் தேடி வந்தனர். “ஐயா தேர்வுக்கு பணம் கட்டியாச்சு. இந்த இரசீதை (பற்று சீட்டை) அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க” என்றனர். அதனைக் கேட்டுக் காமராசர் மனம் நெகிழ்ந்தார்.

ADVERTISEMENT

1. காமராசரின் வீட்டிற்குள் நுழைய முயன்றவர்கள் _____.
அ) பெற்றோர்
ஆ) சிறுவன், சிறுமி
இ) மக்கள்
ஈ) ஆசிரியர்கள்

2. இந்நிகழ்வு சிறுவனது குடும்பத்தின் எப்பண்பை விளக்குகிறது
அ) ஏழ்மை
ஆ) நேர்மை
இ) உழைப்பு
ஈ) கல்லாமை

3. மறுநாள் குழந்தைகள் வந்ததும் காமராசர் மனம் _____.
4. சிறுவனும், சிறுமியும் எதற்காக காமராசரின் வீட்டிற்கு வந்தனர்?
5. காமராசர் செய்த உதவி யாது?

விடைகள்:
1. சிறுவன், சிறுமி
2. நேர்மை
3. நெகிழ்ந்தார்
4. சிறுவனின் தேர்வுக்கு பணம் கட்டுவதற்கு காமராசரிடம் உதவி கேட்டு வந்தனர்
5. சிறுவனின் தேர்வுக்கு பணம் கட்டுவதற்காக காமராசரிடம் பண உதவி செய்தார்

VII. சரியான இடத்தில் பொருத்திச் சொற்றொடரை நிறைவு செய்க:
1. முளையிலே விளையும் தெரியும் பயிர்
2. ஆக்குவோம் இல்லாமை கல்லாமையை

விடைகள்:
1. விளையும் பயிர் முளையிலே தெரியும்
2. கல்லாமையை இல்லாமை ஆக்குவோம்

ADVERTISEMENT

VIII. கட்டங்களில் உள்ள இன எழுத்துகளை எழுதுக:

ண் ம்
தி ந் கி
கி பி ம் து ளி ங்
தெ ன் ல் ங் கு
ள் வி ஞ் ள்

விடைகள்:
1. மண்டபம்
2. தென்றல்
3. சங்கு
4. மஞ்சள்
5. பந்து


Visit Our YouTube Channel For More Free Videos: Click Here

Visit & Join In Our Telegram Group: Click Here


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?