support@techeditz2utnpsc.com | 8300-921-521
அறிவியல் ஆத்திசூடி
Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 1 அறிவியல் தொழில்நுட்பம் “அறிவியல் ஆத்திசூடி”
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. உடல் நோய்க்கு _____ தேவை.
அ) ஔடதம்
ஆ) இனிப்பு
இ) உணவு
ஈ) உடை
2. நண்பர்களுடன் _____ விளையாடு
அ) ஒருமித்து
ஆ) மாறுபட்டு
இ) தனித்து
ஈ) பகைத்து
3. கண்டறி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) கண் + அறி
ஆ) கண்டு + அறி
இ) கண்ட + அறி
ஈ) கண் + டற
4. ஓய்வற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) ஓய்வு + அற
ஆ) ஓய் + அற
இ) ஓய் + வற
ஈ) ஓய்வு + வற
5. ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _____.
அ) ஏன்என்று
ஆ) ஏனென்று
இ) ஏன்னென்று
ஈ) ஏனன்று
6. ஔடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _____.
அ) ஔடதமாம்
ஆ) ஔடதம்ஆம்
இ) ஔடதாம்
ஈ) ஔடதஆம்
II. எதிர்ச்சொற்களைப் பொருத்துக:
1. அணுகு அ. தெளிவு
2. ஐயம் ஆ. சோர்வு
3. ஊக்கம் இ. பொய்மை
4. உண்மை ஈ. விலகு
விடைகள்:
1. அணுகு – விலகு
2. ஐயம் – தெளிவு
3. ஊக்கம் – சோர்வு
4. உண்மை – பொய்மை
III. பாடல் வரிகளுக்கேற்றவாறு முறைப்படுத்துக:
1. சிந்தனை கொள் அறிவியல்
2. சொல் தெளிந்து ஐயம்
3. கேள் ஏன் என்று
4. வெல்லும் என்றும் அறிவியல்
விடைகள்:
1. அறிவியல் சிந்தனை கொள்
2. ஐயம் தெளிந்து சொல்
3. ஏன் என்று கேள்
4. என்றும் அறிவியல் வெல்லும்
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here
Visit & Join In Our Telegram Group: Click Here