support@techeditz2utnpsc.com | 8300-921-521
அறிவியலால் ஆள்வோம்
Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 1 அறிவியல் தொழில்நுட்பம் “அறிவியலால் ஆள்வோம்”
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. அவன் எப்போதும் உண்மையையே _____.
அ) உரைக்கின்றான்
ஆ) உழைக்கின்றான்
இ) உறைகின்றான்
ஈ) உரைகின்றான்
2. ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) ஆழமான + கடல்
ஆ) ஆழ் + கடல்
இ) ஆழ + கடல்
ஈ) ஆழம் + கடல்
3. விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) விண் + வளி
ஆ) விண் + வெளி
இ) வின் + ஒளி
ஈ) விண் + வொளி
4. நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _____.
அ) நீலம்வான்
ஆ) நீளம்வான்
இ) நீலவான்
ஈ) நீலவ்வான்
5. இல்லாது + இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _____.
அ) இல்லாதுஇயங்கும்
ஆ) இல்லாஇயங்கும்
இ) இல்லாதியங்கும்
ஈ) இல்லதியங்கும்
II. நயம் அறிக:
1. பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எழுதுக.
விடைகள்:
1. ஆழக்கடலின் – ஆய்வுகள்
2. செயற்கைக்கோள் – செய்தி
3. எலும்பும் – எந்திரமனிதன்
4. உலகம் – உள்ளங்கை
5. இல்லாது – இயங்கும்
6. உறுப்பை – உடலும்
7. அணு – அனைத்தும்
2. பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எழுதுக.
விடைகள்:
1. ஆய்வுகள் – செய்து
2. இயற்கை – புயலும்
3. நீல – நிலவில்
3. பாடலில் இடம்பெற்றுள்ள இயைபுச் சொற்களை எழுதுக.
விடைகள்:
1. பார்க்கின்றான் – நினைக்கின்றான்
2. சிறக்கின்றான் – உரைக்கின்றான்
3. படைக்கின்றான் -கொடுக்கின்றான்
4. காக்கின்றான் – பார்க்கின்றான்
5. வாழந்திடுவான் – அமைத்திடுவான்
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here
Visit & Join In Our Telegram Group: Click Here