அரசியல் கட்சிகள்

Samacheer Book Back Questions And Answers For இந்திய அரசியலமைப்பு Standard 7 Term 1 “அரசியல் கட்சிகள்”

I. சரியான விடையைத் தேர்வு செய்க:
1. இரு கட்சி முறை என்பது
அ) இரண்டு கட்சிகள் அரசாங்கத்தை நடத்துவது
ஆ) இரண்டு உறுப்பினர் ஒரு கட்சியை நடத்துவது
இ) இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவது
ஈ) இவற்றுள் எதுவும் இல்லை

2. இந்தியாவில் காணப்படும் கட்சி முறை
அ) ஒரு கட்சி முறை
ஆ) இரு கட்சி முறை
இ) பல கட்சி முறை
ஈ) இவற்றுள் எதுவுமில்லை

3. அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கும் அமைப்பு
அ) தேர்தல் ஆணையம்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) உச்ச நீதிமன்றம்
ஈ) ஒரு குழு

4. அரசியல் கட்சிகள் பொதுவாக எதன் அடிப்படையில் தோற்றுவிக்கப்படுகின்றன?
அ) சமயக் கொள்கைகள்
ஆ) பொது நலன்
இ) பொருளாதார கோட்பாடுகள்
ஈ) சாதி

5. ஒரு கட்சி முறை எங்கு நடைமுறையில் உள்ளது?
அ) இந்தியா
ஆ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இ) பிரான்ஸ்
ஈ) சீனா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. மக்களாட்சியின் முதுகெலும்பாகத் திகழ்வது _____
2. நமது நாட்டின் ஒவ்வொரு கட்சியும் _____என்ற அமைப்பில் பதிவு செய்தல் வேண்டும்.
3. அரசியல் கட்சிகள் _____ மற்றும் _____ இடையே பாலமாக செயல்படுகின்றன.
4. ஒரு பதிவு செய்யப்பட்ட ஆனால் _____ அரசியல் கட்சி தேர்தலில் தாங்கள் விரும்பும் சின்னத்தில் போட்டியிட இயலாது.
5. எதிர்க்கட்சித் தலைவர் _____ அந்தஸ்தில் இருப்பார்.

ADVERTISEMENT

விடைகள்:
1. அரசியல் கட்சிகள்
2. தேர்தல் ஆணையம்
3. குடிமக்களுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும்
4. அங்கீகரிக்கப்படாத
5. கேபினட் அமைச்சர்

III. பொருத்துக:
1. மக்களாட்சி                         அ) அரசின் கொள்கைகளை விமர்சிப்பது
2. தேர்தல் ஆணையம்         ஆ) அரசாங்கத்தை அமைப்பது
3. பெரும்பான்மைக் கட்சி   இ) மக்களின் ஆட்சி
4. எதிர்க்கட்சி                           ஈ) சுதந்திரமான நியாயமான தேர்தல்

விடைகள்:
1. இ) மக்களின் ஆட்சி
2. ஈ) சுதந்திரமான நியாயமான தேர்தல்
3. ஆ) அரசாங்கத்தை அமைப்பது
4. அ) அரசின் கொள்கைகளை விமர்சிப்பது

IV. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்வு செய்து பொருத்தமான விடையை தேர்வு செய்க:
1. பின்வரும் கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க.
அ) நாட்டில் உள்ள ஒவ்வொரு கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.
ஆ) தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளையும் சமமாக நடத்துகிறது.
இ) தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தனி சின்னத்தை ஒதுக்குகிறது.
ஈ) இவை அனைத்தும்

2. கூற்று: பெரும்பான்மை கட்சி ஒரு நாட்டின் சட்டங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
காரணம்: தேர்தலில் பிற கட்சிகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஆகும்.
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) காரணம் தவறு, கூற்று சரி.
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.


 

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?