support@techeditz2utnpsc.com | 8300-921-521
வழக்கு
Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 7 நாடு, சமூகம் – நாடு அதை நாடு “வழக்கு”
I. பொருத்துக:
1. பந்தர் அ. முதற்போலி
2. மைஞ்சு ஆ. முற்றுப்போலி
3. அஞ்சு இ. இடைப்போலி
4. அரையர் ஈ. கடைப்போலி
விடைகள்:
1. பந்தர் – கடைப்போலி
2. மைஞ்சு – முதற்போலி
3. அஞ்சு – முற்றுப்போலி
4. அரையர் – இடைப்போலி
II. பின்வரும் தொடர்களை எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் எனப் பிரிக்க:
1. வீரர்கள் நாட்டைக் காத்தனர்.
2. பொதுமக்கள் அந்நியத்துணிகளைத் தீயிட்டு எரித்தனர்.
3. கொற்கைத் துறைமுகத்திலே பாண்டியனுடைய மீனக்கொடி பறந்தது.
4. திருக்குறளை எழுதியவர் யார்?
5. கபிலர் குறிஞ்சிப்பாட்டை எழுதிய புலவர்.
விடைகள்:
III. இடைச்சொல் ‘கு’ சேர்த்துத் தொடரை எழுதுக:
(எ.கா.) வீடு சென்றான்
வீடு + கு + சென்றான் – வீட்டுக்குச் சென்றான்
1. மாடு புல் கொடுத்தார் _____.
2. பாட்டு பொருள் எழுது _____.
3. செடி பாய்ந்த நீர் _____.
4. முல்லை தேர் தந்தான் பாரி _____.
5. சுவர் சாந்து பூசினாள் _____.
விடைகள்:
1. மாடு + கு + புல் கொடுத்தார் – மாடுக்குப் புல் கொடுத்தார்
2. பாட்டு + கு + பொருள் எழுது – பாட்டுக்குப் பொருள் எழுது
3. செடி + கு + பாய்ந்த நீர் – செடிக்குப் பாய்ந்த நீர்
4. முல்லை + கு + தேர் தந்தான் பாரி – முல்லைக்குத் தேர் தந்தான் பாரி
5. சுவர் + கு + சாந்து பூசினாள் – சுவர்க்குச் சாந்து பூசினாள்
IV. இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக:
விடைகள்:
மண் + அழகு = மண்ணழகு
மண் + உண்டு= மண்ணுண்டு
விண் + அழகு = விண்ணழகு
விண் + உண்டு = விண்ணுண்டு
பண் + அழகு = பண்ணழழு
பண் + உண்டு = பண்ணுண்டு
V. அகம் என முடியும் சொற்களை எழுதுக:
விடைகள்:
1. தமிழகம்
2. நூலகம்
3. அச்சகம்
4. மருந்தகம்
5. குறளகம்
6. தலைமையகம்
7. எழிலகம்
8. அலுவலகம்
9. நகலகம்
10. செயலகம்
11. துறைமுகம்
VI. கோடிட்ட இடங்களைத் தமிழ் எண் கொண்டு நிரப்புக:
1. திருக்குறள் _____ பால்களைக் கொண்டது.
2. எனது வயது _____.
3. நான் படிக்கும் வகுப்பு _____.
4. தமிழ் இலக்கணம் _____ வகைப்படும்.
5. திருக்குறளில் _____ அதிகாரங்கள் உள்ளன.
6. இந்தியா _____ ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.
விடைகள்:
1. ௩ (3)
2. க௩ (13)
3. எ (7)
4. ரு (5)
5. க௩௩ (133)
6. க௯௪எ (1947)
VII. குறிப்புகளைக் கொண்டு தலைவர்களின் பெயர்களைக் கட்டங்களிலிருந்து கண்டுபிடித்து எழுதுக:
1. மூதறிஞர் _____.
2. வீரமங்கை _____.
3. பாஞ்சாலங்குறிச்சி வீரன் _____.
4. வெள்ளையரை எதிர்த்த தீரன் _____.
5. கொடிகாத்தவர் _____.
6. எளிமையின் இலக்கணம் _____.
7. தில்லையாடியின் பெருமை _____.
8. கப்பலோட்டிய தமிழர் _____.
9. பாட்டுக்கொரு புலவன் _____.
10. விருதுப்பட்டி வீரர் _____.
11. கள்ளுக்கடை மறியல் பெண்மணி _____.
12. மணியாட்சியின் தியாகி _____.
விடைகள்:
1. இராஜாஜி
2. வேலுநாச்சியார்
3. கட்டபொம்மன்
4. சின்னமலை
5. திருப்பூர் குமரன்
6. கக்கன்
7. வள்ளியம்மை
8. சிதம்பரனார்
9. பாரதியார்
10. காமராஜர்
11. நாகம்மை
12. வாஞ்சிநாதன்
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here
Visit & Join In Our Telegram Group: Click Here