support@techeditz2utnpsc.com | 8300-921-521
தமிழரின் கப்பற்கலை
Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 7 அறிவியல், தொழில்நுட்பம் – அறிவியல் ஆக்கம் “தமிழரின் கப்பற்கலை”
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. தமிழர்கள் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தியது _____.
அ) கலம்
ஆ) வங்கம்
இ) நாவாய்
ஈ) ஓடம்
2. தொல்காப்பியம் கடற்பயணத்தை _____ வழக்கம் என்று கூறுகிறது.
அ) நன்னீர்
ஆ) தண்ணீர்
இ) முந்நீர்
ஈ) கண்ணீர்
3. கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி _____.
அ) சுக்கான்
ஆ) நங்கூரம்
இ) கண்ணடை
ஈ) சமுக்கு
II. கோடிட்ட இடங்ளை நிரப்புக:
1. கப்பல் கட்டுவதற்குப் பயன்படும் மர ஆணிகள் _____ என அழைக்கப்படும்.
2. கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது _____.
3. இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் _____ எனக் குறிப்பிடப்படும்.
விடைகள்:
1. தொகுதி
2. நங்கூரம்
3. கண்ணடை
III. பொருத்துக:
1. எரா அ. திசைகாட்டும் கருவி
2. பருமல் ஆ. அடிமரம்
3. மீகாமன் இ. குறுக்கு மரம்
4. காந்தஊசி ஈ. கப்பலைச் செலுத்துபவர்
விடைகள்:
1. எரா – அடிமரம்
2. பருமல் – குறுக்கு மரம்
3. மீகாமன் – கப்பலைச் செலுத்துபவர்
4. காந்தஊசி – திசைகாட்டும் கருவி
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here
Visit & Join In Our Telegram Group: Click Here